Sleeping Posture: இனி இப்படி படுத்து தூங்காதீங்க! இவ்வளவு ஆபத்து இருக்கா !-sleeping postures for good sleep and healthy life - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sleeping Posture: இனி இப்படி படுத்து தூங்காதீங்க! இவ்வளவு ஆபத்து இருக்கா !

Sleeping Posture: இனி இப்படி படுத்து தூங்காதீங்க! இவ்வளவு ஆபத்து இருக்கா !

Suguna Devi P HT Tamil
Sep 24, 2024 10:44 AM IST

Sleeping Posture: வாழ்வில் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு நாள் சரியாக தூங்க வில்லை என்றாலும் அந்த நாள் சற்று மோசமாகவும், சோர்வாகவும் அமைந்து விடும். தூக்கத்தை வாழ்வின் முக்கிய செயலாக கருத்தில் கொள்ள வேண்டும்.

Sleeping Posture: இனி இப்படி படுத்து தூங்காதீங்க! இவ்வளவு ஆபத்து இருக்கா !
Sleeping Posture: இனி இப்படி படுத்து தூங்காதீங்க! இவ்வளவு ஆபத்து இருக்கா !

தூங்கும் போது அவரவர் வசதிக்கு ஏற்றவாறு தூங்குகிறோம். ஆனால் தூங்கும்  போது நாம் எந்த நிலையில் தூங்குகிறோம் என யாருக்கும் தெரியதில்லை. ஏனெனில் நமது கட்டுப்பாட்டில் இல்லாத தூக்க நிலையால் நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க கூடிய நிலையில் தூங்க வேண்டும். அத்தகைய தூக்க நிலைகள் குறித்து தெரிந்து கொள்ள இதனை முழுதாக படிக்கவும்.   

தூங்குவதற்கான மெத்தை 

முதலில் தூக்கத்தில் முக்கியமானது என்றால் படுக்கையை கூறலாம். இத்தகைய படுக்கை சரியாக இருக்கும் பட்சத்தில் முதுகு வலி வராமல் தடுக்க முடியும். முடிந்த அளவில் உறுதியான மெத்தைகளில் தூங்கும் போது இது போன்ற முதுகு வலி வரலாம். எனவே மென்மையான மெத்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வகை மெத்தை தேவைப்படாவிட்டால், உங்கள் முதுகுத்தண்டின் இயற்கையான வளைவுகளுக்கு ஆதரவை வழங்கும் மற்றும் வசதியாக இருக்கும் மெத்தையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, ஒவ்வொரு 6 முதல் 8 வருடங்களுக்கு ஒரு முறை மெத்தையை மாற்ற வேண்டும். உங்களுக்கு முதுகுத்தண்டில் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் பரிந்துரை பெற்று மெத்தையை தேர்வு செய்யவும். 

எப்படி தூங்கலாம்

பொதுவாக பெரும்பான்மையான மக்கள் இடது அல்லது வலது பக்கவாட்டில் திரும்பி தூங்கும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். மேலும் நேராக நிமிர்ந்து மல்லாக்க படுப்பவர்களும் உள்ளனர். முகத்தை மூடி குப்புற படுத்து தூங்குபவர்களும் உள்ளனர். சிலர் உடலை சுருக்கி தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவை அனைத்திலும் வயிற்றை அழுத்தி குப்புற படுத்து தூங்குவதால் பலருக்கு செரிமாண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கழுத்து வலி உள்ளவர்கள் நேராக நிமிறந்தவாறு படுத்து தூங்கும் போது அந்த கழுத்து வலியில் இருந்து விடுபடலாம். மேலும் முதுகு வலி உள்ளவர்கள் இடது புறம் பக்கவாட்டில் திரும்பி படுத்தால் சரியாகும் என கூறப்படுகிறது. 

உயரமான தலையணை வைத்து தூங்குவதும் பல விதமான வலிகளை  உண்டாக்கும் வாய்ப்பை அளிக்கிறது. மேலும் நேராக நிமிர்ந்த படுக்கும் போது சுவாச பிரச்சனைகள் ஏற்படவும், குறட்டை விடவும் வாய்ப்பு உள்ளது. பக்கவாட்டில் திரும்பி படுப்பது சிறந்த தூக்கத்தை தரும். மேலும் வேறு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பி முறையான மருத்துவரை அணுகி தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.