Shrink Your Belly : 7 நாள் இரவு உணவை தவிர்த்துவிட்டு, இந்த பானத்தை பருகுங்கள், உங்கள் தொப்பையை சுருக்கும்!-shrink your belly skip dinner for 7 days and sip this drink to shrink your belly - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Shrink Your Belly : 7 நாள் இரவு உணவை தவிர்த்துவிட்டு, இந்த பானத்தை பருகுங்கள், உங்கள் தொப்பையை சுருக்கும்!

Shrink Your Belly : 7 நாள் இரவு உணவை தவிர்த்துவிட்டு, இந்த பானத்தை பருகுங்கள், உங்கள் தொப்பையை சுருக்கும்!

Priyadarshini R HT Tamil
Sep 15, 2024 05:12 PM IST

Shrink Your Belly : 7 நாள் இரவு உணவை தவிர்த்துவிட்டு, இந்த பானத்தை பருகுங்கள், உங்கள் தொப்பையை சுருக்கும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.

Shrink Your Belly : 7 நாள் இரவு உணவை தவிர்த்துவிட்டு, இந்த பானத்தை பருகுங்கள், உங்கள் தொப்பையை சுருக்கும்!
Shrink Your Belly : 7 நாள் இரவு உணவை தவிர்த்துவிட்டு, இந்த பானத்தை பருகுங்கள், உங்கள் தொப்பையை சுருக்கும்!

இந்த பானத்தை தினமும் இரவு உணவுக்கு பதில் ஒரு வாரம் மட்டும் எடுத்துக்கொண்டு அது தரும் மாற்றத்தை பாருங்கள். இது தொப்பையை சுருக்கும். குடல் வீக்கத்தை குறைக்கும். உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1

கிரீன் ஆப்பிள் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆப்பிளில் கலோரிகள் குறைவு, இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மற்ற உட்பொருட்கள் உங்கள் உடலுக்கு நல்லது. உங்கள் செரிமான மண்டலத்தை முறைப்படுத்தும் பழங்களுள் ஆப்பிள் மிகவும் முக்கியமானது. இது உங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் பெக்டினை பராமரிக்க துண்டுகிறது. இதில் மாலிக் மற்றும் டாட்டாரிக் அமிலம் உள்ளது.

வாழைப்பழம் – 2

வாழைப்பழம் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்கள், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இதையும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். வாழைப்பழங்கள் உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தசை வலிகளை போக்குகிறது. உடலில் செரடோனின் அளவை அதிகரிக்கிறது. அது மனஅழுத்தத்தைப் போக்குகிறது. உங்கள் மனநிலையை மாற்றுகிறது.

ஓட்ஸ் – 2 ஸ்பூன்

பால் – ஒரு கப்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம், ஆப்பிள், ஓட்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். அதை அப்படியே ஒரு டம்ளரில் மாற்றி இரவு உணவுக்குப்பதில் பருகவேண்டும் அல்லது காலை உணவுக்குப் பதில் பருகவேண்டும். இதை பருகுவதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் ஆகியவை கிடைக்கிறது. இதில் கலோரிகள் இல்லை. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய், இதயநோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

முதலில் உங்கள் தொப்பையை கரைக்கிறது. குடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இது சுவையானதும். இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அதிக கலோரிகள் உடலில் சேராது.

இதுபோல் ஏதேனும் செய்யும் முன் நீங்கள் மருத்துவரின் பரிந்துரை தேவைப்படும்போது எடுத்துக்கொண்டால் நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.