Relationship: 'மீண்டும் மீண்டும் வா!'- உறவில் இங்க ஃபாலோஅப் மஸ்ட் பாஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship: 'மீண்டும் மீண்டும் வா!'- உறவில் இங்க ஃபாலோஅப் மஸ்ட் பாஸ்!

Relationship: 'மீண்டும் மீண்டும் வா!'- உறவில் இங்க ஃபாலோஅப் மஸ்ட் பாஸ்!

I Jayachandran HT Tamil
Jun 12, 2023 12:34 PM IST

இல்லற தாம்பத்தியத்தை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பரவசமான இனிய தாம்பத்தியம்
பரவசமான இனிய தாம்பத்தியம்

பொதுவாக ஆண்களின் உடல்வாகு இயல்புப்படி உடலுறவின்போது ஒருசில நிமிடங்களில் உச்சகட்டப் பரவசத்தை அடைந்து விந்தை வெளியேற்றியவுடன் கதை முடிந்ததாக அர்த்தம். ஆனால் பெண் அப்படியல்ல.

உணர்ச்சிப்பூர்வமானவர்கள். மெல்ல மெல்லத்தான் கரை சேர்வார்கள். அவர்களது பாலுணர்வு மெல்லத் தூண்டப்பட்டு படிப்படியாக உச்சத்தை நோக்கி நகர்வார்கள். இதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களாவது ஆகும். ஆனால் இதற்கு ஆண்களால் ஈடுகொடுக்க முடியாது. சரிதான் ஆச்சு என்று போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிவிடுவார்கள். பெண்ணோ தவிதாயப்பட்டுக் கொண்டிருப்பர்.

பாலுறவு ஒரு கலை. இல்லறத்தின் அடிநாதம். இதில் ஆர்வத்துடன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு களவியலில் ஈடுபடுவதே ஆணுக்கு பெரும் கடமையாகும்.

முதல்முறை உறவின்போதே வெகு நிதானமாக பெண்களைத் தூண்ட வேண்டும். உறவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பே அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயார்ப்படுத்த வேண்டும். அவர்களது பின்புறத்தில் லேசான தட்டல், முன்புறத்தில் உரசல்கள், உள்ளங்கைகளால் முதுகை லேசாக அழுத்தி வருடுதல் போன்ற செய்கைகளைச் செய்ய வேண்டும். உடல் அழகை அருவருப்பில்லாமல் வருணிக்க வேண்டும். யாரும் பார்க்காத நேரத்தில் கன்னத்தில் கடித்து காதில் நாக்கால் வருட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பெண்கள் உறவுக்குத் தயாராகுவர்.

பின்னர் கட்டிலில் சரசத்தில் ஈடுபடும்போதும் நிதானமாக இருக்க வேண்டும். மென்மையாக அவர்களைக் கையாள வேண்டும். வெறி கொண்ட வேங்கையாக மாறினால் சீக்கிரமே தொய்ந்துபோய் 'மான் புலியை வேட்டையாடும் இடம் கட்டில்' என்ற கேவலத்துக்கு ஆளாக நேரிடும்.

பெண்கள் சீற்றம் அடைந்தால் ஆண்கள் செத்த பாம்பாகத்தான் ஆகுவர்.

எனவே முதல்முறை உறவு முடிந்ததும். தொடர்ந்து அவர்களை உடல் முழுவதும் பரவி அரவணைத்து தடவிக் கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு கால் மணிநேரமாவது ஒதுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மெல்ல மெல்ல அவர்களை ஆண்கள் வயப்படுத்தி தூண்டுதல் செய்து இரண்டாம் முறைக்குச் செல்ல வேண்டும்.

முதல் முறை போல் இரண்டாம் முறை கடினமாக இருக்காது. ஏற்கெனவே ஏற்பட்ட ஸ்பரிசத்தால் பெண்கள் பரவசமாகத்தான் இருப்பார்கள். உடலெங்கும் கிளர்ச்சியில் துடித்துக் கொண்டிருக்கும். இதனால் அவர்களை உடல்ரீதியாகத் தூண்டுவது எளிது.

கைகளைவிட நாக்கு நயமான வேலைகளைச் செய்யும் என்பதால் உத்வேகத்துடன் செயல்படவேண்டும். இரண்டாம் முறையில் பெண் பெறுவது பேரின்பம்.

வசூல் டாக்டர் எம்பிபிஎஸ் படத்தில் பார்த்திருப்பீர்கள். உடல் நலமில்லாத காக்கா ராதாகிருஷ்ணன் கைகள் நடுங்க கேரம்போர்டில் சிவப்புக் காயினை பாக்கெட் செய்வார். அதற்கு கமல்ஹாசன் சொல்வார், இது என்ன பிரமாதம், இந்த வயசுல ஃபாலோஅப் போடுறதுதான் கஷ்டம் என்று.

அதுதான் நெஜம். கட்டில் பந்தமும் கேரம்போர்டு விளையாட்டுபோலத்தான். சிவப்புக் காயினை போட்டுவிட்டு வெறுமனே போய் விடமுடியாது. அதைத் தொடர்ந்து ஒரு கருப்புக் காயினையோ அல்லது வெள்ளைக் காயினையோ பாக்கெட் செய்ய வேண்டும்.

முதல் முறை உறவு கொண்டதோடு நிறுத்திவிடாமல் அடுத்தடுத்து புணர்தல்தான் மனைவியரை முழுதிருப்திப்படுத்தியதாக ஆகும்.

எனவே இல்லறத்தின் நல்லறம் புரிந்து வாழ்க வளமுடன்!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.