கல்யாண பந்தியில் கிடைக்கும் ரஸ்க் அல்வா; சூப்பர் சுவையில் வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கல்யாண பந்தியில் கிடைக்கும் ரஸ்க் அல்வா; சூப்பர் சுவையில் வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!

கல்யாண பந்தியில் கிடைக்கும் ரஸ்க் அல்வா; சூப்பர் சுவையில் வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Dec 20, 2024 03:23 PM IST

ரஸ்க் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள்.

கல்யாண பந்தியில் கிடைக்கும் ரஸ்க் அல்வா; சூப்பர் சுவையில் வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!
கல்யாண பந்தியில் கிடைக்கும் ரஸ்க் அல்வா; சூப்பர் சுவையில் வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

ரஸ்க் – 10

ரவை – 2 ஸ்பூன்

ஏலக்காய் – 2

முந்திரி – கால் கப்

திராட்சை – கால் கப்

சர்க்கரை – முக்கால் கப்

குங்குமப்பூ – சிறிதளவு

உப்பு – ஒரு சிட்டிகை

எலுமிச்சை சாறு – கால் ஸ்பூன்

நெய் - தாராளமாக

செய்முறை

ரஸ்க், ரவை, ஏலக்காயை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நல்ல தூளாக அரைத்து விடக்கூடாது. கொரகொரப்பாக இருப்பதுதான் நல்லது. அரைத்து அதை தனியாக வைத்துவிடவேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சையை வறுத்துவிட்டு, அதையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதே நெய்யில் மீண்டும் பொடித்து வைத்து ரஸ்க் கலவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும். நல்ல நிறம் மாறி வரவேண்டும். தட்டில் வைத்து ஆறவிடவேண்டும்.

ஒரு கடாயில் முக்கால் கப் அளவு சர்க்கரையை சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர், குங்குப்பூ, உப்பு சேர்த்து சர்க்கரை கரைந்தவுடன் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டம். எலுமிச்சை சாறு அல்வாவுக்கு நல்ல பொலபொலப்பைக் கொடுக்கும். அதனால்தான் அதை சேர்க்கவேண்டும். சிறிதளவு சேர்க்கும்போது அல்வாவின் சுவை மாறாது.

சர்க்கரைக்கு பாகு பதம் அல்லது கம்பி பதம் தேவையில்லை. பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் வறுத்து ஆறவைத்து ரஸ்க் கலவையை சேர்த்து கிண்டினால், தண்ணீர் வற்றிவரும்.

கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் தாராளமாக நெய் சேர்த்து இறக்கினால் போதும். சூப்பர் சுவையான ரஸ்க் அல்வா தயார். இது பிரட் அல்வா போலவே இருக்கும். தற்போது பந்திகளில்தான் இந்த அல்வாக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. அதை நாம் வீட்டிலே செய்ய முடியும்.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளிவிட்டு வரும் அவர்களுக்கு கொடுத்தால் மகிழ்வார்கள். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.