Online Resume Writing : தரமான ரெஸ்யூம் தயாரிக்க ஆன்லைனில் ஆப்சன் உள்ளது! அரைகுறை ஆங்கிலம் போதும்! சூப்பர் சி.வி. கையில்!
Resume Writing : தரமான ரெஸ்யூம் தயாரிக்க ஆன்லைனில் ஆப்சன் உள்ளது. அதை வைத்து நீங்களே உங்கள் ரெஸ்யூமை தயாரித்துக்கொள்ளலாம். அரைகுறை ஆங்கிலம் தெரிந்தால் போதும். சூப்பர் இங்கிலீஷில் உங்கள் கையில் உங்கள் சி.வி. இருக்கும்.

ரெஸ்யூமை இன்னும், பழைய முறையிலேயே டைப் செய்து பேப்பரில் பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? இப்போது டிஜிட்டலில் ரெஸ்யூம் தயாரிக்கும் முறை வந்துவிட்டது.
உங்கள் தகவல்களை வீடியோவாக நீங்கள் கூறுவதுபோலவே எடுத்துக்கொள்ளலாம் அல்லது கூகுளில் லீட் சிவி (Lead CV) என்று டைப் செய்தால் போதும். உங்களுக்கு தேவையான வகையில் உங்கள் ரெஸ்யூமை நீங்கள் வடிவமைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் போதும். ஏஐ வசதி மூலம் அது உங்கள் ரெஸ்யூமை ப்ரொஃபஷனலாக மாற்றிக்கொடுத்துவிடும்.
அதில் உள்ள ஆப்ஷன்களை என்ன?
சிம்பிள்
இதில் பாரம்பரியமாக ஒற்றை காலத்தில் உங்களின் குறிப்புகள், நீங்கள் விரும்பிய வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை நீங்களே கொடுத்து அதை வடிவமைத்துக்கொள்ளலாம். ஆன்லைனில் எண்ணற்ற மாதிரிகளும் உண்டு. அதில் இருந்தும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.