Relationship : மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி? – இதோ சாணக்கியர் கூறிய குறிப்புகள்!
Relationship : மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி? – இதோ சாணக்கியர் கூறிய குறிப்புகள்!
சாணக்கிய நீதியில் கணவன்-மனைவி உறவைப் பற்றிப் பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி என்ற சந்தேகம் கணவர்களுக்கு எப்போதும் ஏற்படுகிறது. அவர்களுக்கு சாணக்கியர் காட்டும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். இவற்றையெல்லாம் பின்பற்றி, இவர்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ந்திருங்கள்.
அமைதியான மனம்
பிரச்னைகளை தீர்க்கும் வழிகளைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதைவிடுத்து பிரச்னைகளில் கிடந்து உலவக்கூடாது. இதனால் குடும்பத்தின் அமைதி கெடுமேயொழிய பிரச்னைகள் தீராது. குடும்பம் அமைதியாக இருக்க மனம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியான மனம்தான், ஆற்றல் நிறைந்த குடும்பத்தை நிலவுகிறது. ஒற்றுமையிருந்தால் மனதில் அமைதி தானகவே வந்து குடும்பம் நல்ல நிலையை அடையும்.
தற்பெருமை கொள்ளக்கூடாது
சாணக்கியரின் வாக்குப்படி, கணவன்- மனைவி இருவரும் தற்பெருமை நிறைந்தவர்களாக இருக்க முடியாது. அப்படி ஒருவர் இருந்தாலும் அந்த உறவு நீடிக்காது. அன்புதான் உறவின் அடிப்படை, இதில் ஈகோவை விட்டுவிட வேண்டும். பாசம், பற்று என எந்த ஒரு நல்ல குணத்திற்கும் தற்பெருமை என்பது தடையாக இருந்துவிடக்கூடாது. கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தற்பெருமை, ஈகோ போன்றவை இருந்தால், அது அந்த முழு உறவையும் சிதைத்துவிடும்.
ஆணவம், திமிர் போன்ற குணங்களை விடுத்து, அன்பு, அடக்கம் போன்றவற்றை இருவரும் வளர்த்துக்கொள்வது திருமண உறவு நிலைக்க உதவும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த விரும்பும் கணவர்கள் எந்த எல்லைக்கும் இறங்கி நடந்துகொள்வது நல்லது.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கும் ஆண்களிடம்தான், உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். மனைவியை பாதுகாப்பது, மனைவிக்கு உரியவற்றை செய்துகொடுப்பது, கணவனின் கடமை. அப்படியான ஒரு இடத்தை கொடுக்கும் ஆணைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்.
ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்க வேண்டும்
உறவின் அடிப்படை கூறே நம்பிக்கைதான். நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது. குடும்ப உறவில் குறிப்பாக கணவன் – மனைவி இடையே அன்பு பொங்கி பெருக வேண்டுமெனில், அந்த உறவில் நம்பிக்கை மிகவும் அவசியம். நம்பிக்கை இல்லாத திருமண வாழ்க்கையும் நிலைக்காது. நம்பிக்கைதான் திருமண அமைப்பின் அடிப்படை. உறவில் நம்பிக்கை குறைந்தால், சந்தேகம் ஏற்பட்டு உறவையே குலைத்துவிடும். குறிப்பாக கணவன்-மனைவி உறவையே அது சிதைத்துவிடும்.
மனைவிக்கு மரியாதை மிகவும் அவசியம்
சாணக்கியரின் வாக்குப்படி, உறவில், கணவன்-மனைவி உறவு மட்டுமல்ல அனைத்து உறவுகளிலும் மரியாதை மிகவும் அவசியம். கணவன்-மனைவி உறவில் அது இருமடங்காக இருத்தல் இல்வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும். உறவின் அடிப்படை கூறே அன்பு மற்றும் மரியாதை தான். கணவன் மனைவியை கட்டாயம் மதிக்க வேண்டும்.
ஆண் எப்போது பெண்களை மதித்து நடக்க வேண்டும். மனைவியும் கணவனை மதிக்க வேண்டும். ஒருவரையொருவர் மதித்து நடக்கும் குடும்பம்தான் மகிழ்ச்சியாக உள்ளது. மரியாதை என்பது அனைவருக்குமே கொடுக்க வேண்டிய ஒன்று. அதை நாம் கெடுக்கக்கூடாது. துணையை கட்டாயம் மரியாதையுடனும், அன்புடனும் நடத்த வேண்டும். இதை இருதரப்பும் உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் விருப்பங்களை உங்கள் துணை மீது திணிக்கக்கூடாது
உங்களின் விருப்பத்தை உங்கள் துணையின் மீது திணிக்கக்கூடாது. அவர்கள் விரும்பிய வாழ்க்கையைத்தான் அவக்ள் வாழவேண்டும். ஆண்கள் எப்போதும் தங்கள் மனைவியை அவர்கள் சொல்வதை மட்டும் கேட்க கட்டாயப்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யக்கூடாது. அவர்களுக்கென்று விருப்பு வெறுப்புகள் தனியாக உள்ளது. அதை மதித்து அவர்கள் விரும்பியபடி வாழவிட வேண்டும்.
மேலும் குடும்பத்தில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் மனைவி ஏற்க வேண்டும் என்று கணவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இதுபோல் செய்யக்கூடாது. மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு மிகவும் அவசியம் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்து, உங்கள் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காமல் இருப்பது ஆகும்.
டாபிக்ஸ்