Relationship : நீங்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைய வேண்டுமா? எனில் உங்களுக்கு இந்த 10 மந்திரங்கள் உதவும்!-relationship do you want to grow personally then these 10 mantras will help you - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : நீங்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைய வேண்டுமா? எனில் உங்களுக்கு இந்த 10 மந்திரங்கள் உதவும்!

Relationship : நீங்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைய வேண்டுமா? எனில் உங்களுக்கு இந்த 10 மந்திரங்கள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Aug 12, 2024 05:12 PM IST

Relationship : நீங்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைய வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும் தெரியுமா?

Relationship : நீங்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைய வேண்டுமா? எனில் உங்களுக்கு இந்த 10 மந்திரங்கள் உதவும்!
Relationship : நீங்கள் தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைய வேண்டுமா? எனில் உங்களுக்கு இந்த 10 மந்திரங்கள் உதவும்!

தனிப்பட்ட வளர்ச்சி

தனிப்பட்ட வளர்ச்சி என்பது உள்ளுணர்வு சார்ந்த பயணம் ஆககும். இதனால் அது நபருக்கு நபர் வேறுபடும். இதை காட்டாய மாற்றம் எனக் கூறினால் நன்றாக இருக்கும். அது இன்னும் திறன் நிறைந்ததாகவும் இருக்கும்.

உணர்வுரீதியான அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் உணர்வுகளை நீங்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் உணர்வுகளை தொடர்ச்சியாக எப்படி வெளிப்படுத்துவது என்பதில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். பல்வேறு கோணங்களை நீங்கள் புரிந்துகொண்டு, அவர்களின் சூழலில் இருந்தால், நீங்கள் எப்படி நடக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மன அரோக்கியத்துக்கு முன்னுரிமை

உங்களின் மனஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். ஏனெனில் மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம். மனஅழுத்தத்தை பராமரிக்கும் நுட்பங்களை கைகொள்ளுங்கள். உங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அவசியம்.

பாலின சமத்துவத்தை மேம்படுத்துங்கள்

உங்கள் வீடு மற்றும் நீங்கள் பணி செய்யும் இடம் இரண்டிலும் பாலின சமத்துவம் இருக்கவேண்டும். பாலின வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஆண்களுக்கு இந்த வேலை, பெண்களுக்கு இந்தப்பணி என்ற ஸ்டீரியோடைப்கள் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குங்கள்.

கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் கற்காதீர்கள்

இது கொஞ்சம் முரணாக உள்ளதா? தொடர்ச்சியான கற்றலை உறுதிபடுத்துங்கள். ஏற்கனவே நடைமுறையில் உள்ள நம்பிக்கைகளுக்கு சவால் விடுங்கள். புதிய யோசனைகளுக்கு மனதை திறந்து வையுங்கள். வாய்ப்புக்களுக்காக காத்திருங்கள். இது உங்கள் தனிப்பட்ட மற்றும் பணியிட வளர்ச்சிக்கு உதவும்.

ஆரோக்கியமாக வாழ்க்கை முறை பழக்கங்கள்

ஆரோக்கியமான வாழ்வியல் முறையில் கவனம் செலுத்துங்கள். வழக்கமான உடற்பயிற்சிகள் மறறும் சரிவிகித ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் போதிய உறக்கம் ஆகிய அனைத்தும் உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் உடல் ரீதியாக நன்றாக இருப்பது, உங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.

உறவுகளை வளருங்கள்

ஆரோக்கியமான மற்றும் உங்களுக்கு ஆதரவளிக்கு உறவுகளை வளர்த்தெடுங்கள். அதற்கு உங்களின் நேரத்தையும், ஆற்றலையும் முதலீடு செய்யுங்கள். வெளிப்படையாக உரையாடுங்கள், தொடர்ந்து கவனியுங்கள், உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் நல்ல தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள்.

வெளிப்படையான உரையாடல்

நல்ல உரையாடும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். வெளிப்படையாக, நேர்மையாக உறுதியாக உங்களின் கருத்துக்களை, உணர்வுகளை மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்துங்கள். தெளிவான மற்றும் சரியான உரையாடல்களை வளர்த்தெடுங்கள்.

நிதிக் கல்வி

பட்ஜெட் போடுவது, சேமிப்பு, முதலீடு என நிதிக் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள நிதியையும் சரியாக முதலீடு செய்யுங்கள். பொருளாதாரத்தை புரிந்துகொள்ளுங்கள். பாதுகாப்பான மற்றும் நிலையான ஒரு முதலீடு என்பது நிலையான எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

இரக்க குணத்தை உறுதிப்படுத்துங்கள்

இரக்க குணத்தை வளர்த்தெடுங்கள். ஒருவரிடம் அன்பு காட்டுவது மற்றும் மற்றவர்களிடம் அன்பு கொள்வது மிகவும் முக்கியம். பாதிக்கப்படக்கூடியதும், அனுதாபமும் உங்களின் பலங்கள் என்று உணருங்கள். அவை உங்களின் பலவீனம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இலக்குகள்

அர்த்தமுள்ள மற்றும் உண்மையான இலக்குகளை நிர்ணயுங்கள். அது உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பணியின் வளர்ச்சிக்கு உதவும். எப்போதும் வளர்ச்சி மற்றும் இலக்குகளை அடைவதில் உங்களின் படி என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை எப்போதும் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.