Relationship : நீங்கள் சரியான பார்ட்னரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்டீன்னா இதுலலெல்லாம் கவனமா இருங்க!-relationship are you looking for the right partner abdeena be careful with all this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : நீங்கள் சரியான பார்ட்னரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்டீன்னா இதுலலெல்லாம் கவனமா இருங்க!

Relationship : நீங்கள் சரியான பார்ட்னரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்டீன்னா இதுலலெல்லாம் கவனமா இருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 24, 2024 04:02 PM IST

Relationship : நீங்கள் சரியான பார்ட்னரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.

Relationship : நீங்கள் சரியான பார்ட்னரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்டீன்னா இதுலலெல்லாம் கவனமா இருங்க!
Relationship : நீங்கள் சரியான பார்ட்னரை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்டீன்னா இதுலலெல்லாம் கவனமா இருங்க!

சிவப்பு கொடிகளை தவிர்த்தல்

உங்களுக்கான எச்சரிக்கைகளை நீங்கள் கண்டுகொள்ளாதபோது அது உங்களின் ஆரோக்கியமற்ற உறவுக்கு வழிவகுக்கிறது. எனவே நீங்கள் அவமரியாதையான நடவடிக்கைகள், தொடராமை அல்லது எதிர்கால பிரச்னைகளை தவிர்க்க இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவேண்டும்.

குறைவானதை ஏற்பது

உங்களின் தேவைகள் அல்லது உங்களுக்கு ஏற்ற பார்ட்னராக இல்லாதபோது, அது உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. நீங்கள் இதை ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் போகலாம். எனவே உங்களுக்கு ஏற்ற மதிப்புகள், லட்சியங்கள் மற்றும் இலக்குகள் கொண்டவர்களுடன் தொடர்பில் இருங்கள். இல்லாதவர்களுடன் போராடிக்கொண்ருப்பது நல்லதல்ல. விலகுதல் நலம்.

அவசரம்

நீங்கள் அவசரமாக ஒரு உறவைத் தேடக்கூடாது. உண்மையில் அந்த நபர் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளாமல் தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே ஒரு நபருடன் பழகும்போது அவர் குறித்து தெரிந்துகொள்ள நீங்கள் நீண்ட நேரம் செலவிட வேண்டிவரும். அதற்கு அடித்தளமாக நம்பிக்கை, உரையாடல் மற்றும் பரஸ்பர புரிதல் இருக்கவேண்டும்.

பொருந்தக்கூடிய தன்மையை தவிர்த்தல்

வாழ்வின் இலக்குகள், உரையாடல் ஸ்டைல், மதிப்புகள் என பொருந்தக்கூடிய தன்மையை தவிர்த்தல் என்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கம். இது புரிதலின்மையை ஏற்படுத்தும். உங்களின் அடிப்படை நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நபரை நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது. எதிர்காலம் குறித்த உங்களின் பார்வை ஆகியவற்றுடன் ஒத்துப்போகும் நபரை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

சரியாக இருப்பது

எதிலும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, உண்மையல்லாத எதிர்பார்ப்புகள், உங்களின் உறவை குலைக்கும் காரணிகள் ஆகும். எனவே தேவையற்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தாவிட்டால், உங்கள் உறவு சிறக்கும். சரியாக இல்லாததை ஏற்பது அல்லது உங்களை எப்போதும் பாராட்டும் நபரை தேர்ந்தெடுப்பது, இவற்றையெல்லாம் செய்யும்போது அது உங்களின் வாழ்க்கைக்கு மதிப்பளிக்கிறது.

உரையாடல் குறைவது

நீங்கள் திறந்த மற்றும் நேர்மையான உரையாடலை தவிர்க்கும் ஒரு நபரை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது. உங்களின எல்லைகள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என அனைத்தும் உங்களுக்கு புரிதலின்மையை ஏற்படுத்தும். எனவே உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நம்பிக்கையை வளர்த்தெடுங்கள், உங்கள் உறவில் புரிதலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

உணர்வு ரீதியான இணக்கம்

அனுதாபம், ஆதரவு மற்றும் உணர்வு ரீதியான அறிவு என உங்கள் இருவருக்கும் உணர்வு ரீதியான இணக்கம் இல்லையென்றால் அது உங்களின் உறவில் அதிருப்தியை அதிகரிக்கும். எனவே உங்களின் பார்ட்னர் உங்களுடன் எப்போதும் உணர்வு ரீதியாக தொடர்பில் இருக்கவேண்டும். உங்களுடன் ஆரோக்கியமான தொடர்பில் இருக்கும் நபராக அவர்கள் இருக்கவேண்டும்.

உள்ளுணர்வுகளை தவிர்த்தல்

உங்களின் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால், உங்களின் பார்ட்னருக்கு அது வருத்தத்தை தரும். எனவே உங்களின் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களின் உள்குரலை கேளுங்கள். இருவருக்கும் உள்ள இணக்கம் குறித்து நீங்கள் மதிப்பிடும்போது, உங்களுக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும்போது, உங்களுக்கு இவர்தான் சரியான நபர் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.