Relationship : ‘உறவுகள் தொடர்கதை’ உறவில் இத்தனை வகைகளா? அவை வாழ்வில் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும்?-relationship are there so many types of relationship series relationship what kind of impact do they have on life - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : ‘உறவுகள் தொடர்கதை’ உறவில் இத்தனை வகைகளா? அவை வாழ்வில் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும்?

Relationship : ‘உறவுகள் தொடர்கதை’ உறவில் இத்தனை வகைகளா? அவை வாழ்வில் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும்?

Priyadarshini R HT Tamil
Aug 20, 2024 02:58 PM IST

Relationship : ‘உறவுகள் தொடர்கதை’ என்பதற்கு ஏற்ப உறவில் இத்தனை வகைகளா? என்று நீங்கள் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளன. அவை வாழ்வில் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று பாருங்கள்.

Relationship : ‘உறவுகள் தொடர்கதை’ உறவில் இத்தனை வகைகளா? அவை வாழ்வில் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும்?
Relationship : ‘உறவுகள் தொடர்கதை’ உறவில் இத்தனை வகைகளா? அவை வாழ்வில் அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடும்?

குடும்ப உறவு

நமது உறவுகளிலே முதலில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குடும்ப உறவுகள்தான். குடும்ப உறவு என்பது பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன், மற்ற உறவினர்களுடன் என நாம் பேணுவது குடும்ப உறவுகள். இது நமது உணர்வு ரீதியான வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும், மதிப்புகளுக்கும் அடித்தளம் அமைக்கும்.

நேர்மறையான குடும்ப உறவுகள், உங்களுக்கு ஒரு வலுவான உறுதுணையாக இருக்கும். அவர்களுடன் இணைந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆனால், எதிர்மறையான குடும்ப உறவுகள், தீர்க்க முடியாத பிரச்னைகளை ஏற்படுத்தும். அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். எனவே எதிர்மறை குடும்ப உறவுகளிடம் இருந்து விலகியிருந்தால் நல்லது.

காதல்

காதல் நம் அனைவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த உறவு நமது தனிமையைப் போக்குகிறது. நெருக்கத்தையும், உணர்வு ரீதியான உறுதுணையாகவும் இருக்கிறது. ஆரோக்கியமான காதல் உறவு தனிப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தும். ஆழ்ந்த பிணைப்பை உருவாக்கும். ஆனால், ஆரோக்கியமற்ற உறவு, மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். உணர்வு ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும். தனிப்பட்ட வளர்ச்சியை பாதிக்கும்.

நட்பு

நட்பு நமது சமூக வளர்ச்சிக்கு உதவும். நமக்கு உணர்வு ரீதியாக உறுதுணையாக இருக்கும். நமது அனுபவங்கள், இன்ப துன்பங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். வலுவான நட்பு நமக்கு நல்ல துணையாகவும், புரிதலுடனும் நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ஆனால் நச்சு நட்பு எனில், அது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். மனஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

பணியிட உறவு

நீங்கள் பணிபுரியும் இடத்தில் உள்ள உறவுகள், இங்கு உரையாடல் இருக்கும். உங்கள் உடன் பணிபுரிபவர்கள், உங்களை வைத்து வேலைவாங்குபவர்கள், உங்களின் வழிகாட்டி என உங்கள் நேர்மறையான பணியிட உறவுகள் இருந்தால், அது உங்களை பணியில் சிறக்கவும், வளர்ச்சி பாதையில் செல்லவும் உதவும். இதனால் பணியில் திருப்தி, தனிப்பட்ட வளர்ச்சி நீங்கள் முன்னேறுவீர்கள்.

ஆனால் இங்கு உங்களுக்கு எதிர்மறையான ஆட்கள் இருந்தாலோ அல்லது அவர்கள் நச்சு சூழலை உருவாக்கினாலோ அல்லது அலுவலக அரசியலில் சிக்கிக்கொண்டாலோ மாட்டிக்கொள்வீர்கள். இதனால் உங்களுக்கு பணியில் திருப்தியின்மை, மனஅழுத்தம், வாழ்க்கையில் விரக்தி என அனைத்தும் ஏற்படும்.

வழிகாட்டும் உறவுகள்

உங்கள் வாழ்க்கையில், அதிக அனுபவங்களைக் கொண்டவர்கள் உங்களுக்கு வழிகாட்டினாலோ அல்லது உங்களுக்கு ஆதரவு வழங்கினாலோ அது வழிகாட்டும் உறவுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உறவில் உங்களுக்கு எண்ணற்ற வழிகாட்டிகள் இருக்கும்.

உங்கள் திறன் வளர உதவுவார்கள். உங்களின் வாழ்வு வளர வழிகாட்டுவார்கள். பணியில் சிறக்க துணை நிற்பார்கள். நல்ல ஒரு வழிகாட்டி இருந்தால், உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணி இரண்டும் மேம்படும். இல்லாவிட்டால், அதில் தொய்வு இருக்கும்.

சமூக உறவு

சமூகத்தில் உள்ள குழுக்கள் அல்லது நிறுவனங்களுடன் உறவு வைத்துக்கொள்வது, சார்ந்திருத்தல், ஒரு அர்த்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும். நேர்மறை சமூக உறவுகள், சமூக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவக்கூடியவை. சமூகத்துடன் தொடர்பு குறைவாக இருந்தால், அது தனிமை உணர்வில் தள்ளும்.

அறிமுகம்

சில உறவுகள் வெறும் அறிமுகத்துடன் இருக்கும். அதில் நெருக்கம் இருக்காது. இதற்கு ஆழ்ந்த உணர்வு ரீதியான ஆதரவு இருக்காது. இந்த உறவு வெறும் அறிமுகத்துடனே இருக்கும். ஆனாலும் சில வாய்ப்புக்களை வழங்கும். உங்கள் சமூக உறவுகளை விரிவுபடுத்த உதவும். எனினும், இவை உங்கள் வாழ்வில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். இது நெருக்கமான உறவுகள் ஏற்படுத்தும் வலியையும், வாய்ப்பையும் கொடுக்காது.

ஆன்லைன் உறவுகள்

ஆன்லைன் உறவுகள் இந்த காலத்தில் தோன்றியவை. டிஜிட்டிலில் தொடர்புகொள்ள துவங்கியது முதல் உலகமே கிராமமாக சுருங்கியபோது இந்த உறவுகள் மேம்படத் துவங்கின. இந்த தொடர்புகள் நல்ல நட்புகளாக பரிணமித்திருக்கின்றன. குறிப்பாக குறைவாக சமூகத்துடன் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்த உறவுகள் நன்றாக இருக்கம்.

ஆனால் அதில் முகத்தைப்பார்த்து உரையாடல் என்பது குறைவு. இதனால் நன்மைகளும் ஏராளம், தீமைகளும் அதிகம். முதலில் தீமைகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதால் இந்த உறவில் கட்டாயம் கவனமாக இருக்கவேண்டும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.