Tamil News  /  Lifestyle  /  Rava Dosai Baked Rava Dosai Want To Make It Amazing Restaurant Style Here's The Recipe

Rava Dosai : சுடச்சுட ரவாதோசை – ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் செய்து அசத்த வேண்டுமா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Nov 20, 2023 10:00 AM IST

Rava Dosai : சுடச்சுட ரவாதோசை, ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் செய்து அசத்த வேண்டுமா? இதோ ரெசிபி!

Rava Dosai : சுடச்சுட ரவாதோசை – ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் செய்து அசத்த வேண்டுமா? இதோ ரெசிபி!
Rava Dosai : சுடச்சுட ரவாதோசை – ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் செய்து அசத்த வேண்டுமா? இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – கால் கப்

உப்பு – தேவையான அளவு

கெட்டியான மோர் – ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

தட்டிய மிளகு – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காய தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

பாத்திரத்தில் ரவை, மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தட்டிய மிளகு, கறிவேப்பில்லை, பெருங்காய தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பாதி வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு இதை ஆறவிடவேண்டும்.

ஆறிய வெங்காய கலவையை, கலந்து வைத்து மாவு கலவையில் சேர்த்து கலக்க வேண்டும்.

அடுத்து இதில் கெட்டியான மற்றும் புளிப்பான தயிர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றவேண்டும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அரை மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

மாவை நல்ல தண்ணீராக கரைத்துக்கொள்ள வேண்டும். வழக்கமான தோசை மாவு பதத்தைவிட இது தண்ணீராக இருக்க வேண்டும்.

தாவாவை சூடு செய்து, ரவா தோசை மாவை ஊற்றவேண்டும். வழக்கமாக தோசை ஊற்றுவது போலன்றி, ஓரத்தில் இருந்து நடுப்பகுதிக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் ஊற்ற வேண்டும்.

இதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுடவேண்டும்.

சுட சுட ரவா தோசை தயார்.

குறிப்புகள்

வேண்டுமென்றால் ரவையை மிதமாக இடித்துக்கொள்ளலாம்.

ரவா தோசைக்கு மாவை நல்ல தண்ணீராக கரைத்துக்கொள்ள வேண்டும்

தயிர் நல்ல புளித்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் தோசை பச்சை வாசமின்றி இருக்கும்.

ஒரு மணி நேரம் கூட ஊறவைக்கலாம். தோசையை பஞ்சு பதத்தில் ஊற்றக்கூடாது. நல்ல மொறு மொறுப்பாக ஊற்றி எடுக்க வேண்டும்.

கூடுதலாக கொஞ்சம் தேங்காய், மாங்காய், கேரட் என அனைத்தும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோல் தோசை செய்துகொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்