Ragi Soup : உடல் எடை குறைக்க வேண்டுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ஒரு சூப் போதும்!-ragi soup want to lose weight control sugar one soup is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Soup : உடல் எடை குறைக்க வேண்டுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ஒரு சூப் போதும்!

Ragi Soup : உடல் எடை குறைக்க வேண்டுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ஒரு சூப் போதும்!

Priyadarshini R HT Tamil
Jan 29, 2024 11:46 AM IST

Ragi Soup : உடல் எடை குறைக்க வேண்டுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ஒரு சூப் போதும்!

Ragi Soup : உடல் எடை குறைக்க வேண்டுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ஒரு சூப் போதும்!
Ragi Soup : உடல் எடை குறைக்க வேண்டுமா? சர்க்கரையை கட்டுப்படுத்தனுமா? ஒரு சூப் போதும்! (Jarasri's Kitchen)

பூண்டு – 8 பல்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

ஸ்வீட் கார்ன் – ஒரு கைப்பிடி

கேரட் – ஒரு கப்

பீன்ஸ் – ஒரு கப்

காளான் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

(இதை தனியாக வறுத்து, ஆறவிட்டு, காய்ந்த மிக்ஸிஜாரியில் சேர்த்து அரைத்து பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும்)

ராகி மாவை ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும் அதில் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அதில் ஸ்வீட் கார்ன், கேரட், பீன்ஸ், காளான் சேர்த்து நன்றாக வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக காய்கறிகளை வேகவிடவேண்டும்.

அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன், இதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவு கலவையை சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சூப்பை கொதிக்க விடவேண்டும்.

பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மிளகு, சோம்பு, சீரகப்பொடியை இரண்டு ஸ்பூன் மட்டும் சேர்க்க வேண்டும்.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து வெந்ததும் இறக்கினால் மணமணக்கும் ராகி சூப் ரெடி.

ராகியுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்யும்போது இரண்டின் நன்மைகளும் உடலுக்கு இரட்டிப்பாக கிடைக்கும். அதனால்தான் ராகி அடையில் முருங்கைக்கீரை சேர்க்கப்படுகிறது.

இந்த சூப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பருகக்கொடுக்கலாம். அனைவருக்கும் ஏற்றது.

குறிப்பாக உடல் எடை குறைப்பில் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பலனைக்கொடுக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது

கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவான உணர்வை கொடுக்கிறது. இது ஊட்டச்சத்து நிறைந்தது. சுவையானது. இதில் உணவுகளும் எளிதாக செய்துவிடலாம். இது உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்துக்கு பயன்படுத்தலாம்.

சரும சேதத்தை தடுக்கிறது

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இது சருமத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடன் வைக்க உதவுகிறது. சருமத்துக்கு பளபளப்பையும் கொடுக்கிறது. இது உங்கள் பளபள சருமத்துக்கும், இளமை தோற்றத்துக்கும் சிறந்தது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக்கள் நிறைந்தது. இந்த முக்கிய சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. வழக்கமாக ராகி எடுத்துக்கொள்வது தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது. ராகியில் உள்ள கால்சியத்துக்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில் இது எலும்பை உறுதிப்படுத்துகிறது. இதனால் எலும்பு முறிவுகள் சீராகிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கிறது

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உணவுடன் உங்களின் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

கேன்சருக்கு எதிரான குணம் உள்ளது

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் உள்ளது. உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினீர்கள் என்றால் அதற்கு ராகி ஒரு சிறப்பான தேர்வாகும்.

குளூட்டன் இல்லாத டயட்டுக்கு உதவுகிறது

நீங்கள் குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது. அதில் மறைந்துள்ள குளூட்டன்கள் குறித்து கவலைவேண்டாம். அதுவும் பாதுகாப்பானதுதான். உங்கள் உணவை சுவையாக்கும் வழிகளுள் ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

குழந்தையின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. ராகி மாவு குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பல்வேறு உணவுகளில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது.

இதய நோய்களை தடுக்கிறது

ராகியில் கொழுப்பு அல்லது சோடியச்சத்து இல்லை. கூடுதலாக இதில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகரிக்க உதவுகிறது. ஹெச்டிஎல் கொழுப்பு நன்மை தரும் கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது. இதய நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது

ராகியில் உள்ள இரும்புச்சத்தின் மூலம் ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி அனீமியாவை எதிர்த்து போராடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.