Ragi-Murugai Keerai Adai : முருங்கைக்கீரை – ராகி அடை! உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகரிக்கச் செய்யும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi-murugai Keerai Adai : முருங்கைக்கீரை – ராகி அடை! உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகரிக்கச் செய்யும்!

Ragi-Murugai Keerai Adai : முருங்கைக்கீரை – ராகி அடை! உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகரிக்கச் செய்யும்!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2024 05:55 AM IST

Ragi-Murugai Keerai Adai : முருங்கைக்கீரை – ராகி அடை! உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகரிக்கச் செய்யும்!

Ragi-Murugai Keerai Adai : முருங்கைக்கீரை – ராகி அடை! உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகரிக்கச் செய்யும்!
Ragi-Murugai Keerai Adai : முருங்கைக்கீரை – ராகி அடை! உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகரிக்கச் செய்யும்!

பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

முருங்கைக்கீரை – ஒரு கப்

பெரிய வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

செய்முறை

ஒரு கடாயில் ராகி மாவு, பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். அதில் ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக்கீரை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அடை பதத்துக்கு கலந்துகொள்ளவேண்டும்.

தண்ணீர் சேர்த்து கரண்டியில் ஊற்றி அடையாக எடுத்தாலும் சரி அல்லது தண்ணீர் குறைவாக கலந்து ரொட்டிகளாக தட்டி எடுத்தாலும் சரி நன்றாக இருக்கும்.

அடையாக தட்ட விரும்பினால், 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை சேர்த்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான அடை கிடைக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார், சட்னி என தனியாக எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். வெல்லத்தை தொட்டுக்கொண்டும் சாப்பிட சுவை அள்ளும்.

ராகியின் நன்மைகள் மற்றும் சத்துகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.