Ragi Ladoo : பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய லட்டு இது! உடனே செய்திடுங்க!
Ragi Ladoo : பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய லட்டு இது. முழு உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடனே செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்
சூரிய காந்தி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
ஃப்ளாக்ஸ் விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
பரங்கிக்காய் விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
நட்ஸ்கள்
பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
வால் நட்ஸ்கள் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
ராகி மாவு – 1 கப்
வெல்லம் – அரை கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் நெய்யை சேர்த்து அதில் ராகி மாவை நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை வறுபட்ட மணம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒவ்வொரு நட்ஸ் மற்றும் விதைகளை நெய் சேர்ந்து நன்றாக வாசம் வந்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து இந்த நட்ஸ்கள் மற்றும் விதைகளை பொடித்துக்கொள்ள வேண்டும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பாகாக்கி, வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு மற்றும் நட்ஸ் மற்றும் விதைகள் பொடித்தது, நெய் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
பின்னர் சிறிது சிறிதாக வெல்லப்பாகை சேர்த்து கலந்து வைத்துள்ள ராகி மாவை நன்றாக உருட்டி எடுக்க வேண்டும். அந்த வெல்லப்பாகு சூடாக இருக்கும்போதே லட்டுக்களாக தேவைப்பட்டால் நெய் சேர்த்து பிடித்து எடுத்துவிடவேண்டும்.
அனைத்தும் பொடியாக இருப்பதால் லட்டு பிடிக்க வருவது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து முயற்சித்தால் லட்டு நல்ல வடிவத்தில் கிடைத்துவிடும்.
இந்த லட்டு பெண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட பெண்களின் ஆரோக்கியம் பெருகும்.
வெல்லமில் இரும்புச்சத்து உள்ளது. ராகியில் கால்சியம் சத்து உள்ளது. நட்ஸ்களில் உள்ள சத்துக்களும், விதைகளில் உள்ள சத்துக்களும் பெண்களின் உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பவை.
பெண்களுக்கு முடி உதிர்தல், மாதவிடாயால் ஏற்படும் வலிகள் ஆகியவற்றிற்கு இந்த லட்டு நல்ல மருந்தாகிறது. கருப்பை ஆரோக்கியத்துக்கும் இந்த லட்டு மிகவும் நல்லது. பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியம் குன்றியிருப்பார்கள். இந்த லட்டு அந்த நாட்களில் அவர்களுக்கு எனர்ஜியை அதிகரிக்க உதவுகிறது. எனலே இந்த லட்டுவை பெண்கள் அடிக்கடி செய்து சாப்பிட அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
ராகி மாவாகவும் வாங்கி பயன்படுத்தலாம் அல்லது ராகியை அலசி ஓரிவு ஊறவைத்து, ஓரிவு முளைக்கட்டி வைத்து, காயவைத்து அரைத்தும் பயன்படுத்தலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்