ராகி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை; குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ராகி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை; குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி!

ராகி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை; குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Dec 07, 2024 10:43 AM IST

ராகி-சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை செய்வது எப்படி?

ராகி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை; குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி!
ராகி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு அடை; குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ரெசிபி!

தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1

ராகி மாவு – கால் கப்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – கால் இன்ச் (தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்)

எள் – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கஷ்மீரி மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – தேலையான அளவு

செய்முறை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, எள், சீரகம், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கஷ்மீரி மிளகாய்த் தூள் என அனைத்தையும் சேர்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளவேண்டும்.

அடை மாவு பதத்துக்கு கரைத்து, தோசைக்கல்லில் வார்த்து இருபுறங்களிலும் நன்றாக வேகவிட்டு எடுக்கவேண்டும். சூப்பர் சுவையான ராகி, சர்க்கரை வ்ள்ளிக்கிழங்கு அடை தயார்.

இதற்கு பெரிதாக தொட்டுக்கொள்ள ஒன்றும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சாப்பிட தோன்றும். எனவே இதை கட்டாயம் செய்து சாப்பிடுங்கள்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது. சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம்.

அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும். உங்கள் உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.