தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pumkin Pulikuzhambu : பரங்கிக்காய் புளிக்குழம்பு! சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெயுடன் சாப்பிட சொர்க்கம்!

Pumkin Pulikuzhambu : பரங்கிக்காய் புளிக்குழம்பு! சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெயுடன் சாப்பிட சொர்க்கம்!

Priyadarshini R HT Tamil
Feb 19, 2024 10:26 AM IST

Pumkin Pulikuzhambu : பரங்கிக்காய் புளிக்குழம்பு! சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெயுடன் சாப்பிட சொர்க்கம்!

Pumkin Pulikuzhambu : பரங்கிக்காய் புளிக்குழம்பு! சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெயுடன் சாப்பிட சொர்க்கம்!
Pumkin Pulikuzhambu : பரங்கிக்காய் புளிக்குழம்பு! சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெயுடன் சாப்பிட சொர்க்கம்! (subbu's kitchen)

ட்ரெண்டிங் செய்திகள்

பூண்டு பற்கள் – 10

தக்காளி – 1

புளி - எலுமிச்சை அளவு

பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – அரை கப்

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

கடுகு & உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்

கட்டி பெருங்காயம் – சிறிய துண்டு

வெல்லம் – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

புளியை சூடான நீரில் ஊறவைத்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து, வடித்துக் கொள்ளவேண்டும். சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி தனியாக வைத்துகொள்ள வேண்டும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும், அதில் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய பரங்கிக்காயை சேர்த்து தொடர்ந்து வதக்கவேண்டும்.

பரங்கிக்காய் பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து தேவையான உப்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

குழம்பு கொதி வர ஆரம்பித்ததும், வெல்லம் மற்றும் கட்டிப் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். குழம்பின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை கொதித்ததும் இறக்கி விடவேண்டும்.

சூடான சாதத்தில் செக்கு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட அடடா, சுவையில் அசத்தும்.

நன்றி - விருந்தோம்பல் 

பரங்கிக்காயின் நன்மைகள்

பரங்கிக்காய் அமெரிக்காவில் தோன்றிய காய், அறிவியல் ரீதியாக பரங்கிக்காய் ஒரு பழம்தா.

கண்பார்வையை கூராக்கும்

ஒரு கப் பரங்கிக்காயில் நீங்கள் தினமும் உட்கொள்ள வேண்டிய அளவில் 200 சதவீதம் வைட்டமின் ஏ சத்து உள்ளது. அது கண்ணில் உள்ள கார்னியாவை பாதுகாத்து உங்கள் பார்வையை காக்கிறது. இரவு நேரத்தில கண்கள் நன்றாக தெரிவதற்கு உதவுகிறது. இதில் உள்ள லியூடீன் மற்றும் செக்ஸானின் ஆகிய சத்துக்கள், கண்களை கண்புரை நோய் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களில் இருந்து காக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது

இதில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கின்றன.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

ஆரஞ்சு வண்ணமுள்ள உணவுகளில் பொட்டாசியச்சத்துக்கள் அதிகம் இருக்கும். அது உங்கள் ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. எலும்பை வலுப்படுத்துகிறது. உங்களுக்கு சிறுநீரக கற்கள் மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

உங்கள் சரும பொலிவை அதிகரிக்கிறது

பரங்கிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உங்கள் சருமத்துக்கு நல்லது. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. மேலும் இதில் உள்ள புரோவைட்டமின் பீட்டா கரோட்டின், உங்கள் உடல் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய வைட்டமின்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

பரங்கிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் இயக்கத்தை முறைப்படுத்தி, ஆரோக்கியமாக உடல் எடை இருக்க உதவுகிறது. மேலும் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

புற்றுநோய் ஆபத்தை தடுக்கிறது

கேன்சர் செல்கள் எளிதில் பல்கி பெருகக்கூடியவை. இதில் உள்ள கரோட்டினாய்டுகள், அவற்றை தடுத்து சில வகை புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்