Puliyodharai Podi : இந்தப்பொடி மட்டும் ஒரே ஒரு ஸ்பூன் போதும்; ஒரு நிமிடத்தில் புளியோதரை தயார்!
Puliyodharai Podi : இந்தப்பொடி மட்டும் ஒரே ஒரு ஸ்பூன் போதும், ஒரு நிமிடத்தில் புளியோதரை தயார்.
![Puliyodharai Podi : இந்தப்பொடி மட்டும் ஒரே ஒரு ஸ்பூன் போதும்; ஒரு நிமிடத்தில் புளியோதரை தயார்! Puliyodharai Podi : இந்தப்பொடி மட்டும் ஒரே ஒரு ஸ்பூன் போதும்; ஒரு நிமிடத்தில் புளியோதரை தயார்!](https://images.hindustantimes.com/tamil/img/2023/11/27/550x309/puliyodharai_podi1_1701107659556_1701107669193.jpg)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் லஞ்ச் பாக்ஸ் ஈசியாக கட்டிக்கொடுத்துவிடலாம். இந்த ஒரு பொடிய செய்து வைத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம். காலையில் தாமதமாக எழுந்திருக்கும் நாட்களில் உடனடியாக சாதம் வைத்து புளியோதரை தயார் செய்துவிடலாம். உருளைக்கிழங்கை வறுத்துகொடுத்துவிட்டால் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெடி.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – தேவையான அளவு
புளி – 50 கிராம்
கடலைபருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 10 (உங்கள் காரத்தின் அளவுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
புளியை நார், கொட்டை இல்லாமல் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் சிறிது எண்ணெய் சூடாக்கி, அதில் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தது வர மல்லியை நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் வெந்தயம், மிளகு, சீரகம், மூன்றையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
வர மிளகாயை வறுக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
சிறிது எண்ணெய் சேர்த்து புளியை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். புளி நன்றாக வறுத்து வரவேண்டும்.
அனைத்து பொருட்களையும் நன்றாக ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஆறியவுடன் ஒரு கண்ணாடி பாட்லில் சேர்த்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை கண்ணாடி பாட்டிலில் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, 2 ஸ்பூன் கடலை, ஒரு முழு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் நன்றாக ஆறிய சாதம் சேர்த்து கிளறினால், சுவையானி புளியோதரை தயார். இதை தொட்டுக்கொள்ள எதுவுமின்றியும் சாப்பிடலாம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் சேர்த்தும் சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்