Lemon Sweet Pickle: புளிப்பு சுவை எலுமிச்சையில் இனிப்பு சுவை மிக்க ஊறுகாய்! ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது
பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கும் எலுமிச்சையை வைத்து இனிப்பு சுவையுடன் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
பழம், விதை, தோல், சாறு என அனைத்தும் பல வகைகளில் பயன்படும் விதமாக எலுமிச்சை உள்ளது. நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும் தன்மை கொண்ட எலுமிச்சையில், வைட்டமின் சி, சுண்ணாம்புச், சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் பல நோய்களை சரிசெய்யும் சர்வ நிவாரணியாக இருக்கிறது எலுமிச்சை.
உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்துக்கும் பல்வேறு நன்மைகளை தரும் விதமாக எலுமிச்சை சாறு உள்ளது. புளிப்பும், துவர்ப்பும் கொண்ட சுவையாக இருந்து வரும் எலுமிச்சை உடல் எடை குறைப்பு, இருமல் சலி, வலிக்கான நிவாரணியாக இருந்து வருகிறது.
எலுமிச்சையை வைத்து ஊறுகாய் தயார் செய்து சாப்பிடும் பழக்கம் பலரிடையே இருந்து வருகிறது. புளிப்பு சுவை மிக்கதாக இருக்கும் எலுமிச்சை ஊறுகாய் பல்வேறு வகையான சாதங்களுடன் இணைத்து சாப்பிடக்கூடியதாக இருந்து வருகிறது.
அந்த வகையில் எலுமிச்சையை வைத்து இனிப்பு சுவையுடன் ஊறுகாய் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருள்கள்
எலுமிச்சை பழம் - 25
வினிகர் - 1 கப்
சர்க்கரை - அரை கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெந்தயம் - 50 கிராம்
பெருங்காயம் - 25 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்
மஞ்சள் தூள் - 1 டிஸ்பூன்
கடுகு - 1 டிஸ்பூன்
சீரகம் - 1 டிஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
எலுமிச்சையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் வினிகர், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கலந்து ஒரு வார காலம் வரை அப்படியே வைக்க வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து இரண்டு நாள்கள் வரை வைக்க வேண்டும்.
வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் வெந்தயம், பெருங்காயம், கடுகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும். எண்ணெய் காய வைத்து இளம் சூட்டில் வறுத்த பொடியை சேர்த்து அதில் ஊற வைத்த எலுமிச்சையை நன்கு கிளற வேண்டும். அவ்வளவுதான் இனிப்பு சுவை மிக்க எலுமிச்சை ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை பாட்டில் அல்லது டப்பாவில் அடைத்து வைத்தால் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்