தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Pongal Special Recipe Make Millet Pongal To Celebrate This Pongal In A Healthy Way

Pongal Special Recipe : இந்த பொங்கலை ஆரோக்கியமாக கொண்டாட தினை பொங்கல் செய்யலாம் வாங்க!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2024 11:00 AM IST

Pongal Special Recipe : இந்த பொங்கலை ஆரோக்கியமாக கொண்டாட தினை பொங்கல் செய்யலாம் வாங்க!

Pongal Special Recipe : இந்த பொங்கலை ஆரோக்கியமாக கொண்டாட தினை பொங்கல் செய்யலாம் வாங்க!
Pongal Special Recipe : இந்த பொங்கலை ஆரோக்கியமாக கொண்டாட தினை பொங்கல் செய்யலாம் வாங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

பாசிப்பருப்பு – அரை கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நெய் – ஒன்றரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1 நறுக்கியது

இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)

பெருங்காய தூள் – கால் ஸ்பூன்

முழு மிளகு – ஒரு ஸ்பூன்

முந்திரி பருப்பு – கைப்பிடியளவு

கறிவேப்பில்லை – ஒரு கொத்து

செய்முறை -

ஒரு பாத்திரத்தில் தினை மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

குக்கரில் ஊற வைத்த தினை மற்றும் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரை வேக வைக்கவேண்டும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரிப்பருப்பு, முழு மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த தினை பருப்பு கலவையில் சேர்த்து கிளறவேண்டும்.

பொங்கல் கெட்டியாக இருந்தால் சிறிது சூடான தண்ணீர் அல்லது சூடான பால் சேர்த்து கிளறிக் கொள்ளவேண்டும்.

அருமையான திணை பொங்கல் தயார்.

சிறுதானிய வகைகளில் பொங்கல் செய்யும்போது அது கெட்டியாக வாய்ப்பு உள்ளது. எனவே அதிக தண்ணீர் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறு தானிய வகைகளுள் எது செய்தாலும் சூடாகவே சாப்பிட்டு முடித்துவிடவேண்டும். ஆறினால் அது கொஞ்சம் வறட்சியாகவும், சாப்பிடுவதற்கு கடினமாகவும், சுவையும் குறைந்துவிடும்.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்னி சிறந்த தேர்வு

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

தேங்காய் – ஒரு கப்

பொட்டுக்கடலை – கால் கப்

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

தேங்காய்ச் சட்னி செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் தேங்காய் சட்னி ரெடி.

தினைப்பொங்கலுக்கும், தேங்காய் சட்னிக்கும் சூப்பர் காம்போவாக இருக்கும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

WhatsApp channel

டாபிக்ஸ்