Perumal Koil Puliyodharai : புரட்டாசி ஓவர்! இனி பெருமாள் கோயில் புளியோதரை கிடைக்காதே! வீட்டிலே செய்ய இதோ ரெசிபி!
புரட்டாசி முடிந்துவிட்டால் இனி பெருமாள் கோயில் புளியோதரை கிடைக்காதே என்று வருந்துவோருக்காக வீட்டிலே செய்ய இதோ ரெசிபி.
பெருமாள் கோயில் புளியோதரை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
புளிக்கரைசல் – அரை கப்
(பெரிய எலுமிச்சை அளவு புளியை சூடான தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, நன்றாக கரைத்து வடித்துக்கொள்ள வேண்டும்)
புளிக்கரைசலில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து தனியாக ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வேர்க்கடலையை தனியாக வறுத்து தயராக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக சிவந்து பொரிந்தவுடன், புளிக்கரைசலில் சேர்த்துவிடவேண்டும்.
பருப்புகள் அனைத்தையும் தனியாக தாளித்து புளித்தொக்கில் சேர்க்க வேண்டும் அப்போதுதான் பருப்பு வகைகள் மொறுமொறு வென்று இருக்கும்.
புளியோதரை பொடி செய்ய தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – கால் டேபிள் ஸ்பூன்
வர கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
அனைத்தையும் தனித்தனியாக வறுத்து, அனைத்தையும் பொடி செய்துகொள்ள வேண்டும்.
இந்தப்பொடியை நீங்கள் தயார் செய்துவைத்துக்கொண்டால் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.
அனைத்தையும் ஆறிய சாதத்துடன் சேர்த்து கலந்துவிடவேண்டும். சுவையான கோயில் புளியோதரை சாப்பிட தயாராக உள்ளது. இதற்கு சுண்டல் புளிக்கூட்டு அல்லது தேங்காய் அல்லது தேங்காய் துவையல், அல்லது வத்தல் என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்