Peas Masala : ஆண் மலட்டுத்தன்மையை போக்கும் பட்டாணி! தேங்காய்ப்பால் சேர்த்து கறி கறி செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peas Masala : ஆண் மலட்டுத்தன்மையை போக்கும் பட்டாணி! தேங்காய்ப்பால் சேர்த்து கறி கறி செய்வது எப்படி?

Peas Masala : ஆண் மலட்டுத்தன்மையை போக்கும் பட்டாணி! தேங்காய்ப்பால் சேர்த்து கறி கறி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 12, 2024 11:04 AM IST

Peas Masala : ஆண் மலட்டுத்தன்மையை போக்கும் பட்டாணி! தேங்காய்ப்பால் சேர்த்து கறி கறி செய்வது எப்படி?

Peas Masala : ஆண் மலட்டுத்தன்மையை போக்கும் பட்டாணி! தேங்காய்ப்பால் சேர்த்து கறி கறி செய்வது எப்படி?
Peas Masala : ஆண் மலட்டுத்தன்மையை போக்கும் பட்டாணி! தேங்காய்ப்பால் சேர்த்து கறி கறி செய்வது எப்படி? (Kitchen Food of India )

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தேங்காய்ப்பால் - 2 கப் (முதல் பால் + இரண்டாம் பால் சேர்த்தது)

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க

கீறிய பச்சை மிளகாய் - 4

பூண்டு பற்கள் - 10

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

செய்முறை

காய்ந்த பச்சை பட்டாணியை 5 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து வதக்கவேண்டும். பின் நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவேண்டும்.

பின் அடுப்பை அனைத்து விட்டு மல்லித்தூள் சேர்த்து கலந்து இறக்கவேண்டும். அவை ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.

அவை வதங்கியதும் வேகவைத்த பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.

பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவேண்டும்.

மசாலா 4 நிமிடங்கள் கொதித்து பச்சை வாசனை போனதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவேண்டும்.

ஆப்பம், இடியாப்பம், நெய் சோறு, சீரக சாதத்திற்கு சுலபமான சைட் டிஷ் தயார்.

இதை பச்சை பட்டாணி மற்றும் காய்ந்த பட்டாணி இரண்டிலும் செய்துகொள்ளலாம். பச்சை பட்டாணி சேர்த்து செய்யும்போது தனியாக குக்கரில் வைத்து வேகவைக்க தேவையில்லை. மசாலாவுடனே சேர்த்து வேகவிட்டால் போதும்.

நன்றி – விருந்தோம்பல்.

பட்டாணியின் நன்மைகள்

வளரும் குழந்தைகள் தினமும் 3 ஸ்பூன் பட்டாணி சாப்பிட மூளை வலுப்பெறும். ஞாபக சத்தி அதிகரிக்கும்.

பச்சைப்பட்டாணில் வெண்டைக்காயைவிட அதிகளவில் பாஸ்பரஸ் சத்து உள்ளது. இது குழந்தைகளின் புத்திக்கூர்மையை அதிகரிக்க உதவுகிறது.

ஒல்லியானவர்கள் தினமும் உணவில் பட்டாணி சேர்த்துவந்தால் அவர்கள் உடல் பருமனாகும். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் வல்லமையும் கொண்டது பச்சைபட்டாணி.

பச்சைப்பட்டாணியை தினமும் சுண்டல் செய்து சாப்பிட்டால் அதில் உள்ள பாஸ்பரஸ் சத்துக்கள் மனநல பாதிப்புக்களுக்கு குணமளிக்கிறது. பீட்டா குலுக்கன் சத்துக்கள் உடலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. உடல் அதிகமாவதை தடுக்கிறது.

நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியத்துக்கும் பச்சை பட்டாணி உதவுகிறது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் இருக்க பச்சை பட்டாணியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் மக்னீசியச்சத்து அதிகம் உள்ளது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தள்ளிப்போகிறது. உலர்ந்த பட்டாணியைவிட பச்சைப்பட்டாணியே சத்துக்கள் நிறைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.