Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுக்கும் வழிகள்! அவர்கள் வாழ்வு சிறக்க உதவும்!-parenting tips ways to teach your children good manners help them succeed in life - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுக்கும் வழிகள்! அவர்கள் வாழ்வு சிறக்க உதவும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுக்கும் வழிகள்! அவர்கள் வாழ்வு சிறக்க உதவும்!

Priyadarshini R HT Tamil
Jan 22, 2024 02:42 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுக்கும் வழிகள்! அவர்கள் வாழ்வு சிறக்க உதவும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுக்கும் வழிகள்! அவர்கள் வாழ்வு சிறக்க உதவும்!
Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நடத்தைகளை கற்றுக்கொடுக்கும் வழிகள்! அவர்கள் வாழ்வு சிறக்க உதவும்!

உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுங்கள்

உங்கள் குழந்தையிடம் அன்றாடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களை பாராட்டுங்கள். கட்டி அரவனைத்து அன்பை பொழியுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். அவர்களின் எல்லைகள் விரிவடையும் அவர்களை ஆளுமைமிக்கவர்களாகவும் மாற்றும்.

உங்கள் பேரன்டிங் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளுங்கள்

உங்களின் குழந்தை வளர வளர அவர்களின், உங்களின் பேரன்டி முறையும் மாறவேண்டும். அவர்களுக்கு நீங்கள் சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். அவர்கள் கொஞ்சம், கொஞ்சமான சுதந்திரத்தை உணர அனுமதிக்க வேண்டும். இவை அனைத்திலும் ஒரு சமநிலையை ஏற்படுத்தி தரவேண்டும்.

நிபந்தனையற்ற அன்பை வழங்க வேண்டும்

உங்கள் அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை. உங்கள் அன்பு நிபந்தனையற்றது என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அவர்களை திருத்துவது முக்கியமாக இருந்தபோதும், அவர்களுக்கு உங்கள் அன்பின் ஆழமும், வகையும் கட்டாயம் தெரியவேண்டும். 

அவர்களுக்கு அந்த அன்பு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் அந்த அன்பு அமையவேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நீங்கள் செயல்படவேண்டும்.

விதிகளையும் எல்லைகளையும் வரையறுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கான விதிகளை வகுப்பது மிகவும் அவசியம். அந்த விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். இது உங்கள் குழந்தைக்கு ஒரு கட்டமைப்பை உருவாக்கித்தரும். அந்த கட்டமைப்பு, அவர்களுக்கு ஒரு வழக்கத்தை கொண்டுவரும். அதில் உங்களை ஒரு வழிகாட்டியாக காடிக்கொள்ளுங்கள்.

தரமான நேரம்

நீங்கள் ஒருவரோடு ஒருவர் தரமான நேரத்தை செலவிடவேண்டும். அது உங்கள் குழந்தைகளுடன் ஒரு பிணைப்பை உருவாக்கித்தரும். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மகிழ்ந்திருக்கும் நடவடிக்கைகளில் அவர்களுடன் உங்களையும் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். இது அவர்களின் வாழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

குடும்ப விதிகளை எளிமையாக்குங்கள்

உங்கள் குடும்ப விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுடன், அவற்றை எளிமையாக்குங்கள். ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்களை கொடுத்துவிடுங்கள். எதிர்பார்ப்புகளை குழந்தைகள் புரிந்துகெள்ள வேண்டுமெனில், தொடர்ந்து விதிகளை அவர்கள் பின்பற்றுவது ஒன்றே அவர்களுக்கு உதவும். எனவே அதை உறுதிப்படுத்துங்கள்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுங்கள்

உங்கள் குழந்தைகளிடம் எப்போது நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களிடம் எதிர்மறையான எதையும் பேசாதீர்கள். நல்ல பழக்க வழக்கங்களை அவர்களிடம் விதைத்து எடுப்பதில், அவர்களின் நற்பழக்கவழக்கங்களை பாராட்டுவதும், அதற்கு பரிசு கொடுப்பது அல்லது அங்கீகரிப்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளிடம் நல்ல நடவடிக்கைகளை வளர்த்து எடுக்க வேண்டுமெனில், அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதிகாரமான பெற்றோராக இருத்தல்

உங்கள் வீட்டில் அதிகாரமான பெற்றோர இருக்கும்போதுதான் உங்களால் நல்ல நடத்தை உள்ள குழந்தைகளை வளர்த்தெடுக்க முடிகிறது. திறந்த மனதுடனான உரையாடல், தெளிவான விதிகள், பாசம், அன்பு, பற்று ஆகியவை உங்கள் குழந்தைகளை பிரச்னைகளை தீர்க்கும் குணம் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்கும். இது ஒரு ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவை வளர்த்தெடுக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.