Parenting Tips : உங்கள் குழந்தைகளை படிப்பில் படுசுட்டியாக்குவது எப்படி? பள்ளி இனி கசக்காது!
Parenting Tips : உங்கள் குழந்தை வெற்றியாளராக வேண்டுமா? அதற்கு இதுதான் தேவை!
உங்கள் குழந்தையின் வெற்றிக்கு முக்கியமான தேவை என்ன தெரியுமா?
பள்ளி படிப்பு மற்றும் ரேங்க்களில் உங்கள் குழந்தைகளை வழிநடத்திச்செல்ல உங்களுக்கு சில வழிமுறைகள் தேவை. அவர்களுக்கு கற்றல் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். தேவையான திறன்களை அவர்கள் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிப்படிப்பில் படுசுட்டி குழந்தைகளை உருவாக்க வேண்டுமா? அதற்கான வழிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
வாசிப்பதை நேசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்
உங்கள் குழந்தைகளை புத்தக உலகத்தில் திளைக்கவிடுங்கள். படிப்பது அவர்களின் மொழி புலமையை மட்டும் வளர்க்காது. கற்றல் மீதான ஆர்வத்தையும் தூண்டும். கதை நேரத்தில் நீங்கள் அவர்களை கதை சொல்ல அனுமதியுங்கள்.
கேள்விகள் கேளுங்கள் அவர்களுக்கு பெருந்தலைவர்களை அறிமுகப்படுத்துங்கள். அறிவை வாழ்நாள் முழுவதும் கற்க அவர்கள் வேட்கை கொள்ள வேண்டும். அதற்கான அடித்தளமிடுங்கள்.
தினமும் கற்றல் வாய்ப்புகள்
கற்றல் என்பது பள்ளி வகுப்பறையோடு முடிவதல்ல. எனவே அவர்களுக்கு நல்ல மதிப்பீடுகளை கற்றுக்கொடுத்து, தினமும் அவற்றை செய்வதற்கு அறிவுறுத்துங்கள். ஏன் என்று கேள்விகள் கேட்க அவர்களை ஊக்குவியுங்கள்.
பயணத்தின்போதும், காத்திருக்கும்போதும், மற்ற வேலை நாட்களிலும், கார்களில் செல்லும்போதும் கல்வியை அவர்கள் வாழ்வின் அங்கமாக்குங்கள்.
உங்கள் குழந்தையின் கல்வி பயணத்தில் துணையிருங்கள்
உங்கள் குழந்தையின் பள்ளிப்படிப்பு பயணத்தில் அவர்களுடன் தொடர்ந்து இருங்கள். அவர்களின் படிப்பு மற்றும் அவர்களின் வேலைகளை, வீட்டுப்பாடங்களை செய்வதை உறுதிப்படுத்துங்கள். புத்தகங்கள், பாடபுத்தகங்கள் குறித்து அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுங்கள்.
அவர்கள் பள்ளியின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ந்து அவர்களுடன் உரையாடலில் ஈடுபடுங்கள். அவர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள். அது அவர்களின் கல்வி தேவைகளை புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் உதவும்.
ஒட்டுமொத்த வளர்ச்சி
பள்ளி ரேங்குகளில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள். அவர்களின் நடத்தைகள், தன்னம்பிக்கை, உத்வேகம், பொறுப்பு, தனிப்பட்ட திறமைகளை வளர்ப்பது என அனைத்தையும் வளர அனுமதியுங்கள். கல்வியில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு துணை நிற்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்துதான் செய்யும் முயற்சியில்தான் ஒரு குழந்தையை வெற்றி பெற வைக்க முடியும். எனவே இது ஒரு ஒட்டுமொத்த முயற்சிதான்.
கல்வியில் உள்ள திறன்களை அங்கீகரியுங்கள்
உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட திறமையை கண்டுபிடித்து கொண்டாடுங்கள். அதற்கு அங்கீகாரம் கொடுங்கள். ஆர்வம், கிரியேட்டிவிட்டி, கிரிட்டிக்கல் திங்கிங், ஒருங்கிணைக்கும் திறன் என பல்வேறு திறமைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். இவை மாறக்கூடியவை. அறிவுசார்ந்த எதிர்காலத்துக்கு இது மிகவும் முக்கியமானது.
வெற்றிக்கான முக்கிய திறன்களை வளர்த்தெடுங்கள்
அவர்களுக்கு திறன்களை கற்றுக்கொடுங்கள். அவர்களின் அசைன்மென்ட்கள், தினசரி வேலைகள், ஸ்டடி மெட்டீரியல்கள் என அனைத்தையும் அவர்கள் ஒருங்கிணைத்து பராமரிக்கக் கற்றுக்கொடுங்கள். அசைன்மென்ட்களை செய்வதற்கு அவர்களுக்கு போதிய நேரத்தை ஒதுக்கிக்கொடுங்கள். படிக்கும் நேரங்களில் கவனமுடன் செயல்பட ஊக்குவியுங்கள். கல்வி மீது நேர்மறையான எண்ணங்களை வளர்க்க உதவுங்கள்.
ஆதரவான ஒரு கற்கும் சூழலை உருவாக்குங்கள்
வீட்டில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு சூழலை உருவாக்கிக்கொடுங்கள். ஒரு நல்ல படிக்கும் இடத்தை உருவாக்குங்கள். அதற்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்துகொடுங்கள். தினமும் படிக்கும் நேரத்தை உறுதிசெய்யுங்கள். படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொங்கள். படிப்பதற்கு நல்ல சூழலை உருவாக்கிகொடுத்தீர்கள் என்றால் அது உங்களுக்கு கல்வியில் வெற்றியடைய உதவும்.
கிரிட்டிக்கல் சிந்தனையை ஊக்குவியுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு கிரிட்டிக்கலாக சிந்திக்கும் நிலையை ஏற்படுத்தி கொடுங்கள். அவர்களின் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய கேள்விகளை கேளுங்கள். உரையாடல்களை நிகழ்த்துங்கள். அவர்கள் விசாரணை செய்யும் மற்றும் ஆய்ந்தறியும் மனநிலையை அவர்களிடம் வளர்க்க முயற்சி செய்யுங்கள். குழந்தையின் பள்ளி வளர்ச்சிக்கு இந்த திறன்கள் அனைத்தும் மிகவும் முக்கியம்.
பெரிய மற்றும் சிறிய சாதனைகளை கொண்டாடுங்கள்
உங்கள் குழந்தைகளின் வெற்றிகளை கொண்டாடுங்கள். அது பெரியதோ அல்லது சிறியதோ அதை கட்டாயம் கொண்டாடுங்கள். ஒரு சிறிய ப்ராஜெக்ட்டை முடித்தாலோ அல்லது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றாலே அதை கொண்டாடுங்கள். அவர்களுக்கு அது பெருமையையும், உத்வேகத்தையும் கொடுக்கும். அவர்களின் கல்வியில் முன்னேறிச்செல்ல அவர்களுக்கு உத்வேகமாக அமையும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்