Parenting Tips : குழந்தைகள் உங்களிடம் பொய் கூறுகிறார்களா? அதற்கு காரணம் இதுதான் பெற்றோரே!
Parenting Tips : ஆனால் குழந்தைகள் சில பொய்களை ஏன் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான காரணங்கள் இவைகள்தான்.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் பொய்யுரைப்பதற்கான காரணங்கள் இதுதான்.
குழந்தைகள் சில நேரங்களில் பொய்யுரைக்கிறார்கள். குழந்தைகள் நிறைய கதைகளைக் கூறி பொய்யுரைக்கிறார்கள். ஒரு சிறிய விஷயத்திற்கெல்லாம் ஏன் பொய்யுரைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.
ஆனால் குழந்தைகள் சில பொய்களை ஏன் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான காரணங்கள் இவைகள்தான்.
பயம் வந்தால் குழந்தைகள் பொய்யுரைக்கிறார்கள்
குழந்தைகளுக்கு பயம் வந்தால் அவர்கள் பொய்யுரைக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்கு பெற்றோர் கோவப்பட்டாலோ அல்லது கடுமையான தண்டனை கொடுத்தாலோ, குழந்தைகள் பொய்யுரைக்கிறார்கள்.
அது நேர்மையாக இருப்பது ஆபத்தோ என்ற சூழலை உருவாக்குகிறது. குழந்தைகள் இந்த எதிர்மறை பதிலை தவிர்க்க பொய்யுரைக்கலாம். கடுமையான விளைவுகளை எதிர்கொள்வதற்கு பதில் குழந்தைகள் பொய்யை தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிறிய கவனம்
குழந்தைகளுக்கு சரி எது தவறு என்று கற்றுக்கொடுப்பதற்கு, நீண்ட உரை கொடுக்கவேண்டிய தேவையில்லை. எளிமையாகவும், சுருக்கமாகவும் சொல்லி விளங்க வைத்தாலே போதுமானது.
நீண்ட உரையாடலைவிட சுருக்கமாக சொல்வதே போதுமானது. குழந்தைகள் நேர்மையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கவில்லை. அவர்கள் அடுத்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
பெற்றோர்கள் வலை விரிக்கிறார்கள்
பெற்றோர்கள் சில நேரங்களில் குழந்தைகளுக்கு வலை விரிக்கிறார்கள். குழந்தைகள் அதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக பொய்யுரைக்கிறார்கள். எனவே குழந்தைகள் அதிகளவில் கேள்விகள் கேட்பதை தவிர்க்கவேண்டும்.
அவர்கள் வெளிப்படையான உரையாடலை நடத்தவேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தாத வகையில் உரையாடல் இருக்கவேண்டும். நேர்மையான எண்ணங்களை வளர்த்தெடுக்கும் ஒரு சூழலை பெற்றோர் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் உண்மை உரைக்கும்போது பாராட்ட வேண்டும்
குழந்தைகளுக்கு நேர்மறையான தூண்டுதல்தான் மிகவும் நன்மை கொடுப்பதாகும். குழந்தைகள எனவே குழந்தைகள் நேர்மையை வளர்த்துக்கொள்வதற்கான சூழலை பெற்றோர் உருவாக்கித்தரவேண்டும். குழந்தைகள், உண்மையை உரைப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டை அவர்களை உணரச்செய்யவேண்டும்.
இதனால் அவர்கள் எதிர்காலத்திலும் பொய்யுரைக்க மாட்டார்கள். இது பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும்.
குழந்தைகளிடம் அமைதியாக கூறவேண்டும்
குழந்தைகள் பொய்யுரைப்பதை பெற்றோர் கண்டுபிடித்துவிட்டால், அதை குழந்தைகளிடம் அமைதியாக கூறுவேண்டும். அவர்களை நாம் திட்டக்கூடாது. அவர்களிடம் கோவப்படக்கூடாது. நாம் ஏதேனும் எதிர்மறையாக செயல்பட்டால் குழந்தைகள் மேலும் பொய்யுரைப்பார்கள். எனவே நாம் நேர்மறையாக செயல்படவேண்டும்.
மாறாக, அவர்களிடம் மோதல் போக்கு இல்லாமல் இருப்பது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக உணரச்செய்கிறது. குழந்தைகளும் தங்களின் தவறுகளை அச்சமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்தவர்கள் தங்களை விமர்சிப்பதையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.
உணர்வுகளை மறைப்பதற்கு பொய்யுரைக்கிறார்கள்
குழந்தைகள் சிலரின் உணர்வுகளுக்காகவும் பொய்யுரைக்கிறார்கள். அது சில நேரங்களில் அவர்களின் உணர்வாகவோ அல்லது அடுத்தவர்களின் உணர்வாகவோ இருக்கிறது.
அவர்கள் அக்கறை கொண்ட ஒருவரின் மனதை புண்படுத்தாமல் இருப்பதற்காக அவர்கள் பொய்யுரைக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கு நேர்மையான இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதும், அவர்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு எந்த சூழலிலும் நேர்மையாக இருப்பதற்கு உதவும்.
அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறார்கள்
குழந்தைகள், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், முன்னேறவேண்டும் என்ற அறிவுரையால் அழுத்தமாக உணர்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் பெற்றோரிடம், அங்கீகாரத்தை பெறுவதற்காக பொய்யுரைக்கிறார்கள்.
ஆதரவான மற்றும் நல்ல சூழலை வளர்த்தெடுக்க வேண்டும். அங்கு தவறுகள் வாய்ப்புகளாக பார்க்கப்படவேண்டும். வளர்ச்சிக்கான வாய்ப்புக்களாக குழந்தைகள் அவற்றை நினைக்கவேண்டும். எனவே பெற்றோர் குழந்தைகளின் அழுத்தத்தை குறைக்கவேண்டும். நேர்மையை ஊக்குவிக்கவேண்டும்.
டாபிக்ஸ்