Pappaya Benefits: குளிர்காலத்துக்கு உகந்த பழமாக திகழும் பப்பாளி! ஏன் தெரியுமா?
அதிகாலை நேரத்தில் சற்று குளிர் நிகழும் இந்த காலத்துக்கு உகந்த பழமாக பப்பாளி உள்ளது. அதற்கான காரணமும், பப்பாளி பழத்தால் நிகழும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
உங்களது உணவோடு பப்பாளி பழத்தை சேர்த்துகொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக மழை, குளிர்காலத்தில் இதை சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதிகமான ஊட்டச்சத்துகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இனிப்புச் சுவையுடன் கூடிய இந்த பழம் வாயில் வைத்தவுடன் எளிதில் கரைகிறது. உடலின் வெப்பத்தை அதிகரித்து வாதம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.
குளிர் காலத்தின்போது சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படுவது இயற்கையானது. இதிலிருந்து விடுபட உதவுகிறது பப்பாளி பழம். ஏனென்றால் இதில் பாப்பைன் மற்றும் சைமோபாபைன் என இரண்டு அற்புத நெதிகளில் மலசிக்கல் பிரச்னையை சீர் செய்கிறது. இவை புரதத்தை எளிதாக செரிமானம் அடைய உதவுவதன் மூலம் செரிமான பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை பப்பாளியில் 200% அதிகமான வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை நாளொன்றுக்கு தேவையானதை பூர்த்தி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையானதாக பப்பாளி உள்ளது. இதய நோய் பிரச்னை ஏற்படாமல் தவிர்ப்பதோடு, ஃபோலேட் சத்துக்களின் களஞ்சியமாகவும், மகனீசியம், வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்சத்துகள் நிறைந்தவையாகவும் உள்ளது.
பாப்பாளியில் உள்ள நன்மைகள் பற்றி பிரபல ஆயுர்வேத மருத்துவர் திக்ஷா பாவ்சர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
"பப்பாளி இயல்பாகவே சூட்டை வரவழைக்கும் பழமாகவும், வதம் மற்றும் கபத்தை சமநிலை அடையச்செய்கிறது. இதிலுள்ள அதிகபட்ச ஆன்டிஆக்சிடன்ட்கள் (பீட்டா கரோடீன்) கால்சீயம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஈ, ஏ உள்ளிட்டவை தோல் சார்ந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது, பப்பாளியில் உள்ள அதிகபட்ச நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்னையால் தவிப்பவர்களுக்கு தீர்வாக உள்ளது.
பப்பாளி பழத்தில் மட்டுமில்லாமல் அதன் இலைகள், பழங்களில் உள்ள விதைகளிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பப்பாளி இலைகள் பிளெட்லெட் அளவை அதிகரிக்க உதவுவதோடு, மலேரியாவுக்கு எதிரான பண்புகள் செழுமையாக உள்ளது. அதேபோல் டெங்கு காய்ச்சல் எதிராக போராடும் வீட்டு மருந்தாகவும் பப்பாளி இலைகள் உள்ளன.
பப்பாளியில் உள்ள நன்மைகள்
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- பப்பாளியில் உள்ள வெப்பத்தன்மை காய்ச்சல் மற்றும் சளிக்கு உதவுகிறது
- மாதவிடாயின்போது வலி ஏற்படுவதை குறைக்கிறது
- உடலில் ஏற்படும் அழற்சிகளை குறைக்கிறது
- நீரழிவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது
- நச்சு நீக்கியாக செயல்படுகிறது (குறிப்பாக கல்லீரல்)
- இதயத்துக்கு நன்மை தருகிறது
- மலச்சிக்கலுக்கு சிறந்தது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்