தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Paneer Kabab Satisfies Vegetarians Yogurt Paneer Kebab Easy To Make At Home

Paneer Kebab : சைவ பிரியர்களை சாட்டிஸ்ஃபை செய்யும்! தயிர் பன்னீர் கபாப்! வீட்டிலே செய்யலாம் எளிதாக!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 10:13 AM IST

Paneer Kabab : சைவ பிரியர்களை சாட்டிஸ்ஃபை செய்யும்! தயிர் பன்னீர் கபாப்! வீட்டிலே செய்யலாம் எளிதாக!

Paneer Kebab : சைவ பிரியர்களை சாட்டிஸ்ஃபை செய்யும்! தயிர் பன்னீர் கபாப்! வீட்டிலே செய்யலாம் எளிதாக!
Paneer Kebab : சைவ பிரியர்களை சாட்டிஸ்ஃபை செய்யும்! தயிர் பன்னீர் கபாப்! வீட்டிலே செய்யலாம் எளிதாக! (Home Cooking)

ட்ரெண்டிங் செய்திகள்

கெட்டி தயிர் – முக்கால் கப்

வெங்காயம் - 1 நறுக்கியது

பச்சை மிளகாய் - 1 நறுக்கியது

இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

மிளகு தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

உடைத்த கடலை – 4 ஸ்பூன் (வறுத்து பொடித்தது)

மைதா – 3 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

பாத்திரத்தில் பன்னீர், தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகு தூள், உப்பு, வறுத்து பொடித்த உடைத்த கடலை, மைதா, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீர் சேர்த்து பிசைந்தால் வடை பதத்துக்கு வராது.

இதை சிறிய வடை போல் தட்டிக்கொள்ள வேண்டும்.

இதை ஃபிரிட்ஜில் 5 நிமிடம் வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, செய்த பன்னீர் கபாபை போட்டு பொன்னிறமாகும் வரை இரண்டு புறமும் வறுக்கவேண்டும்.

நன்றி – ஹேமா சுப்பிரமணியன்.

பன்னீரின் நன்மைகள்

100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.

புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.

பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் எலும்பை பலப்படுத்த உதவுகிறது.

ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளை பெறுவதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பன்னீர் எடுத்துக்கொள்ளலாம். தசை மற்றும் நரம்பு மண்டலம் நன்றாக இயங்க கால்சியம் உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

பன்னீரில் ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. அது எளிதில் செரிமானமாகக்கூடியது. கொழுப்பு சேராமல் செரித்து, உடைந்து உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது என்று பொருள். உடல் பருமனுக்கு கொழுப்பு சேர்வதுதான் முதல் காரணம். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு பன்னீர் ஒரு நல்ல ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவாகும்.

செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது

உடலில் செரிமான மண்டலம் முக்கிய பாகம் ஆகும். நாம் சாப்பிடும் உணவை உடைத்து, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. செரிமான மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது வழக்கமான இயக்கத்தை பாதிக்கும்.

பன்னீரில் அதிகளவில் மினரல்கள், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. பாஸ்பரஸ் மலமிளக்கியாக செயல்படுகிறது. பாஸ்பரஸ் செரிமானத்துக்கு உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலானோர், பால் பொருட்களை தள்ளி வைப்பார்கள். ஆனால் பன்னீரை அவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். பன்னீரில் மெக்னீசிய சத்து நிறைந்துள்ளது. அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

இதில் குறைவான அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே இதை நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது

பன்னீர் வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. குறிப்பாக குழந்தைகளில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான கோளாறுகள் பன்னீரை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுகிறது.

வலுவான நோய் எதிர்புப மண்டலத்தை கட்டமைக்க உதவுகிறது. பன்னீரில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பொருட்கள் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. இது குழந்தைகளின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது மற்றும் அவர்களின் கவனிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது

பன்னீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இது பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இது தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது.

மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுவார்கள். பன்னீரை தினமும் எடுத்துக்கொண்டால், அது வலிகளை குறைக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கால்சியம், எலும்புகளை காக்கிறது. இதில் அதிகளவில் சிங்க் உள்ளது. அது ஆண்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்