Palak Adai : பாசிப்பயிறு - பாலக்கீரை அடை! ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Palak Adai : பாசிப்பயிறு - பாலக்கீரை அடை! ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்

Palak Adai : பாசிப்பயிறு - பாலக்கீரை அடை! ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்

Priyadarshini R HT Tamil
Nov 13, 2023 04:37 PM IST

Palak Adai : பாசிப்பயிறு, பாலக்கீரை அடை. ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட், ஸ்னாக்சாகவும் செய்து மகிழலாம்.

Palak Adai : பாசிப்பயிறு - பாலக்கீரை அடை! ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்
Palak Adai : பாசிப்பயிறு - பாலக்கீரை அடை! ஹெல்தியான ப்ரேக் ஃபாஸ்ட்

(பாசிப்பருப்பை உங்களுக்கு வேண்டுமானால், முளை கட்டியும் எடுத்துக்கொள்ளலாம்)

பாலக்கீரை – 1 கப்

வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு (இடித்தது)

கேரட் – ஒரு கப் (துருவியது)

கடலை மாவு – ஒரு கப்

சீரகம் – 1 ஸ்பூன்

ஓமம் – 1 ஸ்பூன்

செய்முறை

ஊறவைத்து அரை பாசிப்பயறு, (கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்) ஒரு கப் மாவில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பாலக்கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், துருவிய இஞ்சி, கடலை மாவு, சீரகம், ஓமம் என அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

தண்ணீர் சேர்த்து அடைமாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதை தோசைக்கல்லில் சேர்த்து அடைபோல் இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும்.

இந்த மாவையும் குழிப்பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி பணியாரமாகவும் சுட்டு எடுக்கலாம். எண்ணெயில் குட்டி குட்டியாக கிள்ளி சேர்த்து பக்கோடாவாகவும் செய்துகொள்ளலாம்.

பாசிபயறு, கடலை மாவு சாப்பிடுவது வயிறு மந்தத்தை ஏற்படுத்தும் என்பதால், இதில் ஓமம், சீரகம், இஞ்சி இவையும் சேர்க்கும்போது, அது வயிறு உபாதைகளை குறைக்க உதவுகிறது. தேவைப்பட்டால் சிறிது பெருங்காயத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள சாஸ் போதுமானது. நீங்கள் சாம்பார், வெங்காயம், தேங்காய், புதினா, கறிவேப்பிலை சட்னி என எதை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். கீரை, கேரட் என அனைத்தும் சேர்ப்பதால் இது உங்களுக்கு ஹெல்தியானதும் கூட. ஒருமுறை சுவைத்தால் அடிக்கடி சாப்பிட விரும்புவீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.