Orange Peel Pachadi : சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சு பழத்தோலை தூக்கி வீசாதீர்கள் இதோ பச்சடி செய்து சாப்பிடலாம்!
Orange Peel Pachadi : சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சு பழத்தோலை தூக்கி வீசாதீர்கள் இதோ பச்சடி செய்து சாப்பிடலாம்!
ஆரஞ்சு பழத்தைவிட அதன் தோலில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. பழத்தைவிட 4 மடங்கு கூடுதல் சத்துக்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆரஞ்சு பழத்தின் தோலில் பாலிமெத்தாக்ஸி ஃபளாவன்ஸ் மற்றும் ஹெஸ்பெரிடின் என்ற ஃப்ளாவனாய்ட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள மற்ற ஃபைட்டோகெமிக்கல்கள்களும் உடலுக்கு நன்மை கொடுப்பவையாகும். ஃப்ளாவனாய்ட்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். இது இதயநோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் அதிகளவில் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. மேலும் ஆரஞ்சு பழத்தின் தோலில் காப்பர், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன. பொதுவாக ஆரஞ்சு பழத்தின் தோலை நாம் தூக்கி வீசுகிறோம். ஆனால் அதில் நாம் சட்னி, பச்சடி என எண்ணற்ற உணவுகள் செய்து சாப்பிட முடியும். ஆரஞ்சு பழத்தின் தோலில் இருந்து தயாரிக்கப்படும். இவை சிறந்த சைட்டிஷ்களாகும். ஆரஞ்சு பழத்தோலை வைத்து பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழத்தின் தோல் – ஒரு கப் (கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கியது)
புளி – எலுமிச்சை அளவு (ஊறவைத்தது)
சம்பார் பொடி அல்லது குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
வரமிளகாய் அல்லது பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, வெந்தயம், வர மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
அதில் பொடியாக நறுக்கிய ஆரஞ்சு பழத்தின் தோல்களை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவேண்டும். அடுத்து சாம்பார் பொடியை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசல் மற்றும் பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
இந்தக்கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவேண்டும். எண்ணெய் பிரிந்து கெட்டியாகி வந்தவுடன், இதை தயிர் சாதத்துடன் தொட்டுக்கொள்ளலாம்.
வெரைட்டி சாதம் அல்லது வேறு சாதங்களுக்கு தொட்டுக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். வித்யாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆரஞ்சு பழத்தின் தோல்லி சட்னியும் செய்யலாம்.
ஆரஞ்சு பழத்தோலில் உள்ள நன்மைகள்
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
அலர்ஜிகள் ஏற்படாமல் தடுக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
செரிமான கோளாறுகளைப் போக்குகிறது.
மது அருந்துவதால் ஏற்படும் அதீத போதையை தடுக்கிறது.
வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
தொற்று, சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடுகிறது.
சரும பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
ஆஸ்துமாவைப் போக்குகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த ஆரஞ்சு பழத்தின் தோலை இனிமேல் தூக்கி வீசாதீர்கள். பழத்தை சாறு அல்லது அப்படியேவோ சாப்பிட்டுவிட்டு, தோலை எடுத்து கழுவி சுத்தம் செய்து ஆரோக்கியமான உணவு வகைகளை செய்து சாப்பிடுங்கள். இதுபோல் நீங்கள் செய்யும்போது, அதன் நன்மைகளும் கிடைக்கும். ஆனால் சாப்பிடுபவர்களுக்கு அது ஆரஞ்சு பழத்தின் தோல் என்றே தெரியாது அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். உங்களுக்காக இதுபோன்ற வித்யாசமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. சூப்பர் சுவையான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் பக்கத்தை தொடருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்