Onion Rava Dosa : கிரிஸ்பி அண்ட் க்ரெஞ்சியான ஆனியன் ரவா தோசை – ரெஸ்டாரென்ட் ஸ்டைல் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Rava Dosa : கிரிஸ்பி அண்ட் க்ரெஞ்சியான ஆனியன் ரவா தோசை – ரெஸ்டாரென்ட் ஸ்டைல் ரெசிபி!

Onion Rava Dosa : கிரிஸ்பி அண்ட் க்ரெஞ்சியான ஆனியன் ரவா தோசை – ரெஸ்டாரென்ட் ஸ்டைல் ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Sep 27, 2023 12:30 PM IST

Onion Rava Dosa : ஆனியன் ரவா தோசை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? இதோ ரெஸ்டாரென்ட் சுவையில் வீட்டிலே செய்யலாம் ஆனியன் ரவா தோசை.

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஆனியன் ரவா தோசை செய்வது எப்படி?
ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ஆனியன் ரவா தோசை செய்வது எப்படி?

பச்சரிசி மாவு – முக்கால் கப்

மைதா மாவு – முக்கால் கப்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

முந்திரி – 10 (உடைத்தது)

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து (பொடியாக நறுக்கியது)

தயிர் – அரை கப்

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கேரட் – கால் கப் (துருவியது)

மாங்காய் – 2 ஸ்பூன் (துருவியது) தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை

ரவை, பச்சரிசி மாவு, மைதா மாவு, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, முந்திரி, சர்க்கரை, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், துருவிய கேரட், துருவிய மாங்காய், தயிர் சேர்த்து நன்றாக கலந்து வைத்து அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.

தயிர் இல்லாவிட்டால் எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக்கொள்ளலாம். அது உடலுக்கும் ஆரோக்கியமானது. மேலும் ரவா தோசைக்கு சிறிது புளிப்பு சுவையை கொடுக்கும். அளவாக சேர்க்க வேண்டும். அதிகம் சேர்த்துவிடக்கூடாது.

அரை மணிநேரம் ஊறிய மாவில், 5 கப் அளவுக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒரு கப் மாவுக்கு 5 கப் தண்ணீர் என்பது அளவு. நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். மாவு நல்ல தண்ணீர் பதத்துக்கே இருக்க வேண்டும்.

இப்போது தவாவை சூடாக்கி மாவை கரண்டியில் மோண்டு தோசைப்போல் அல்லாமல் தவா முழுவதும் மேலேயிருந்து ஊற்ற வேண்டும். அப்போதுதான் கிரிஸ்பி மற்றும் கிரெஞ்சியான தோசை கிடைக்கும். தோசை ஊற்றுவதுபோல் சேர்த்து ஊற்றினால் வராது. தோசை மிக மெல்லியதாக இருக்க வேண்டும்.

இதற்கு சாம்பார், தேங்காய், தக்காளி, புதினா, கறிவேப்பிலை என அனைத்து சட்னிகளும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இதற்கு வெஜிடபிள் குருமா செம்ம கம்போ. இது ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் செய்யப்படும் ரவா தோசை ஆகும். இந்த ரவா தோசையை நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.