Oats Cutlet : ஓட்ஸ் கட்லெட்! குழந்தைகள் விரும்பும் ஈவ்னிங் ஸ்னாக்! ஆரோக்கியமும் நிறைந்தது!
Oats Cutlet : ஓட்ஸ் கட்லெட்! குழந்தைகள் விரும்பும் ஈவ்னிங் ஸ்னாக்! ஆரோக்கியமும் நிறைந்தது!
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
பட்டாணி – கால் கப் (வேக வைத்தது)
கடலை பருப்பு – கால் கப் வேகவைத்தது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
குடை மிளகாய் – கால் கப் நறுக்கியது
கேரட் – 1 நறுக்கியது
இஞ்சி – ஒரு துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கொத்தமல்லி இலை – கைப்பிடி
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
சீரக தூள் – ஒரு ஸ்பூன்
ஆம்சூர் பொடி – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
கடலை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கடலை பருப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், ஆம்சூர் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஓட்ஸ் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கிக்கொள்ள வேண்டும்.
கையில் எண்ணெய் தடவி கட்லெட் கலவையை எடுத்து தட்டி, தனியாக ஓட்ஸ் வைத்து அதில் பிரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் வைத்து இரண்டு புறத்திலும் பொன்னிறத்தில் வரும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஷேலோ ஃப்ரை முறையிலே வறுத்து எடுத்துக்கொள்ளலாம். டீப் ப்ரை கட்லெட்டுக்கு எப்போதும் சுவையை தராது.
சுவையான ஓட்ஸ் கட்லெட் தயார். இதற்கு தக்காளி சாஸ் அல்லது கெட்ச்அப் வைத்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை இந்த கட்லெட்டை சுவைத்துவிட்டீர்கள் என்றால் மீண்டும், மீண்டும் இந்த கட்லெட்டை சாப்பிட விரும்புவீர்கள்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
ஓட்ஸ், ஆரோக்கியம் நிறைந்த உணவு. அதனால் இது ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கும். இதில் காய்கறிகளும் சேர்ப்பதால் உடலுக்கு கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கிறது.
உங்களுக்கு பிடித்த காய்கறிகளும் சேர்த்துக்கொள்ளலாம். இதை நீங்கள் அவனில் வைத்து பேக் செய்தும் எடுத்துக்கொள்ளலாம். ஏர் ஃப்ரையில் வைத்துக்கொண்டீர்கள் என்றால் எண்ணெயின் அளவை குறைத்துக்கொள்ளலாம். இதற்கு மல்லி, புதினா சட்னியும் தொட்டுக்கொள்ளலாம்.
டயட்டில் இருப்பவர்கள் அதிகம் ஓட்ஸ் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அதை வைத்து ஒரேமாதிரி உணவுகளையே மீண்டும், மீண்டும் செய்து சாப்பிடாமல் இதுபோன்ற வித்யாசமான உணவுகளை செய்து அவ்வப்போது சாப்பிட்டு போரிங் டயட்டை ருசியாக்கலாம். உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுக்கும் ஓட்ஸில் உள்ள ஊட்டச்சத்தின் நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்