Female Condoms: பாலியல் உறவில் உச்சம்..பக்க விளைவுகள் இல்லை! தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க உதவும் பெண்ணுறைகள்
Female Condoms: தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஆணுறைகளை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பயன்படுத்தலாம் என்பது இன்றைய காலகட்டத்திலும் பல பெண்களுக்குத் தெரியாது. பாலியல் உறவில் உச்சம் பெறவும், பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க உதவும் விதமாக பெண்ணுறைகளை பெண்கள் பயன்படுத்தலாம்.
பெண்ணுறைகள்: இன்று எவ்வளவு காலம் முன்னேறியிருந்தாலும், பாலியல் பாதுகாப்பு, பாலியல் உறவால் பரவும் நோய்கள், மாதவிலக்குபோன்ற பிரச்னைகள் வரும்போது, பெரும்பாலான பெண்கள் அதைப் பற்றி அமைதியாகவோ அல்லது வெளிப்படையாகப் பேசவோ தயங்குகிறார்கள்.
பாலியல் போன்ற பேசக்கூடாத விஷயம் பற்றிய போதிய தகவல் இல்லாததால், பல நேரங்களில் ஆண்கள், பெண்கள் என பாலினம் வித்தியாசமின்றி பெரிய உடல்நல அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதுமட்டுமின்றி, தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க ஆணுறைகளை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பெண்ணுறைகளை பயன்படுத்தலாம் என்பதும் பெரும்பாலான பெண்களுக்குத் தெரியாது.
இந்த செய்தியை படிக்கும் போது நீங்களும் ஆச்சர்யப்பட்டால், பெண்ணுறை என்றால் என்ன, பெண் ஆணுறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் பெண்களுக்காக தயாரிக்கப்படும் இந்த பெண்ணுறையின் நன்மைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெண்ணுறை என்றால் என்ன?
பெண்ணுறை, ஃபெமிடோம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பாலியூரிதீன் என்று அழைக்கப்படும் மென்மையான மற்றும் மெல்லிய பிளாஸ்டிக்கால் ஆனது.
உடலுறவின் போது விந்து கருப்பையை அடைவதைத் தடுக்க பெண்ணுறைகள் பெண்ணுறுப்பில் செருகப்படுகின்றன.
பெண்ணுறைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
ஆண்களுக்காகத் தயாரிக்கப்படும் ஆணுறைகளை விட பெண்களுக்காகத் தயாரிக்கப்படும் பெண்ணுறைகள் அளவில் பெரியவை.
மாதவிலக்கு காலத்தில் டம்போன் அல்லுகு மென்சுரல் கப் பயன்படுத்தும் பெண்களுக்கு, இந்த பெண்ணுறை பயன்படுத்துவது கடினமான காரியம் அல்ல.
பிறப்புறுப்புக்குள் டம்போன் செருகப்படுவது போல, இந்த பெண்ணுறை பெண்ணுறுப்பில் செருகப்படுகிறது. இதைச் செய்யும்போது, பெண்ணுறையை வளைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெண்ணுறையின் வெளிப்புற வளையத்தை பெண்ணுறைக்கு வெளியே 1 அங்குலத்துக்கு வெளியே வைக்கவும், பின்னர் அதை கையால் பிடித்து வெளியே எடுக்கவும்.
பெண்ணுறை நன்மைகள்
உங்கள் பார்ட்னர் ஆணுறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, நீங்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றால், நீங்கள் பெண்ணுணுறைகளை பயன்படுத்தலாம்.
பெண் ஆணுறை சரியாகப் பயன்படுத்தப்பட்டால், அது தேவையற்ற கர்ப்பம் மற்றும் எஸ்டிடி, எஸ்டிஐ மற்றும் எச்ஐவி போன்ற தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.
பெண்ணுறை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அதேபோல் பாலியல் உறவிலும் உச்சத்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது.
பெண்ணுறுப்பை முழுவதும் பெண்ணுறை சுற்றியிருப்பதால் ஆணிடமிருந்து பரவும் பால்வினை தொற்றிலிருந்து பாதுகாக்கும். அத்துடன் கருத்தடையை ஏற்படுத்தும்.
பாதுகாப்பான பாலியல் உறவுக்கு ஆண்கள் மட்டுமே ஆணுறை அணிவது என்கிற காலம் மாறி தற்போது பெண்களும் பெண்ணுறைகளை அணிந்து உறவில் இன்பத்தை பெறுவதுடன், கர்ப்பம் ஆவதையும் தடுக்கலாம்.
பெண்ணுறைகளை உறவில் ஈடுபட தொடங்கும் முன்னரே பொருத்தி கொள்ளலாம். இதிலும் ஊராய்வு தன்மை அதிகமாக இருக்கும்.
பெண்ணுறைகள் பற்றி போதிய விழிப்புணர்வு என்பது இல்லாது சூழல் இன்றுவரையிலும் இருந்து வருகிறது. அத்துடன் ஆணுறையை விட விலை அதிகமாகவும், எளிதில் கிடைக்ககூடியதாக இல்லாமலும் பெண்ணுறைகள் இருக்கின்றன.
பெண்ணுறைகளை கடைகளில் வாங்குவதை காட்டிலும் ஆன்லைன் மூலமே வாங்கி வேண்டிய நிலை உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்