Non Resident Indian Day : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்! வரலாறு மற்றும் முக்கியத்துவம்!-non resident indian day non resident indian day history and significance - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Non Resident Indian Day : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்! வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

Non Resident Indian Day : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்! வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

Priyadarshini R HT Tamil
Jan 09, 2024 07:00 AM IST

Non Resident Indian Day : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்! வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

Non Resident Indian Day : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்! வரலாறு மற்றும் முக்கியத்துவம்!
Non Resident Indian Day : வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்! வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு நம் நாட்டுக்கு கொடுக்கும் பங்களிப்பை மதிக்கும் வகையில் ஜனவரி 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1915ம் ஆண்டு இதே நாளில்தான், மகாத்மா காந்தி, வெளிநாட்டில் வசித்த இந்தியர், தென் ஆப்பிரிக்காவில் இருந்த இந்தியா திரும்பினார். அவர் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுடன் இந்திய அரசு தொடர்புகொள்ளும் விதமான இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2015ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தினம் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் கருத்தரங்கங்கள் நடத்தப்படுகிறது. அ

தில் வெளிநாடுகளில் வாழும் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்குதாரர்கள் கலந்துகொள்ளும் வகையில் நடத்தப்படுகிறது. இதன்மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய அரசுடன் தொடர்பில் இருந்து நாட்டுக்கும் வளர்ச்சி ஏற்படுத்தலாம்.

அவர்களின் மூதாதையர்களை நினைவு கூறுவதன் மூலம் அவர்கள் தங்கள் உறவுகளுடன் தொடர்பில் இருக்கலாம். இவ்வாறு இருவரும் பயன்பெறும் வகையில் இது நடத்தப்படுகிறது. உலகில் எந்த மூலையில் வசிக்கும் இந்தியரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

தேச அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தோரை இணைக்க இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர் மற்றும் அரசு இருவரும் பயன்பெறுகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.