Healthy Snacks: ஓவன் வேண்டாம்..பேக்கிங் தேவையில்லை! சுவை ப்ளஸ் ஆரோக்கியம் என 2 இன் 1 பலன்கள் தரும் இனிப்பு பலகாரம்
பேக்கிங் இல்லாமல், இனிப்பு சுவையுடன் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் 2 இன் 1 பலன்களை கொண்டிருக்கும் இனிப்பு பலகாரமாக இருக்கும் சாக்லேட் தேங்காய் டேட்ஸ் பந்துகள் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

No oven? No problem! Try this easy recipe of No-Bake Chocolate Coconut Date Balls (Photo by The Pantry)
பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களுக்கு ருசியான மற்றும் சத்தான மாற்றாக நீங்கள் தேடுகிறீர்களானால், இயற்கையான இனிப்பு, ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுவையின் சரியான கலவையான நோ-பேக் சாக்லேட் தேங்காய் டேட்ஸ் உருண்டைகள் உங்களை நன்கு திருப்திபடுத்தும்.
உடலுக்கு ஆற்றல் தரும் இந்த பந்துகளை இரண்டு வாரங்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைத்து சாப்பிடலாம். ஆரோக்கியமான இனிப்பாக இருக்கும் இவை, கையில் வைத்திருக்க வசதியான சிற்றுண்டியாக உள்ளது.
இந்த நோ-பேக் சாக்லேட் தேங்காய் டேட்ஸ் உருண்டைகள், ஆரோக்கியமும், சுவையும் மிக்க உணவை விரும்புவர்களுக்கான சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது. அனைத்து வயதினருக்கும் பிடித்தமானதாக இருக்கும் இந்த சிற்றுண்டி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
