Nerve System : இந்த ஒரு பானமும், ஒரு பயிற்சியும் போதும்! உங்கள் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பு பெறும்!-nerve system this one drink and one exercise is enough your entire nervous system will be energized - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nerve System : இந்த ஒரு பானமும், ஒரு பயிற்சியும் போதும்! உங்கள் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பு பெறும்!

Nerve System : இந்த ஒரு பானமும், ஒரு பயிற்சியும் போதும்! உங்கள் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பு பெறும்!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2024 10:47 AM IST

Nerve System : இந்த ஒரு பானமும், ஒரு பயிற்சியும் போதும்! உங்கள் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பு பெறும்!

Nerve System : இந்த ஒரு பானமும், ஒரு பயிற்சியும் போதும்! உங்கள் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பு பெறும்!
Nerve System : இந்த ஒரு பானமும், ஒரு பயிற்சியும் போதும்! உங்கள் ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் சுறுசுறுப்பு பெறும்!

சியாடிக்கா நரம்பில் பிரச்னை என்றால் என்ன?

சியாடிக்கா என்பது நமது முதுகில் துவங்கி பின்னாங்காலில் இறுதி வரை செல்லக்கூடிய ஒரு நரம்பு சியாடிக்கா என்பதாகும். உடலில் உள்ள நரம்புகளிலே மிக நீளமான ஒற்றை நரம்பு இந்த சியாடிக்கா நரம்பு. இந்த நரம்பில் கோளாறு ஏற்படும்போது, கால் வலுவிழப்பது, இரவில் உறங்கும்போது காலை பிடித்து இழுப்பது, ஒரு கை-கால் மட்டும் மறத்துப்போவது, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும்.

எலும்புகளுக்கு இடையே இருக்கக்கூடிய ஜவ்வு விலகி பாதிக்கப்படும்போது, சியாடிக்கா நரம்பில் பிரச்னைகள் ஏற்படும். கருவுற்றுள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, முதுகெலும்பில் வீக்கம் இருப்பது, 40 வயதை கடப்பவர்களுக்கு டிஸ்க் பிரச்னைகள் ஏற்பட்டவர்கள். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தசைகளில் பாதிப்பு ஏற்பட்டவர்கள். இந்த பிரச்னைகள் தண்டுவடத்தில் ஊடுருவி நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிப்படையத் துவங்கும். இதனால்தான் அந்த சியாடிக்கா நரம்பு வலுவிழந்து தன்னுடைய பணியை சரிவர செய்ய முடியாமல், நரம்பு வலிக்கத் துவங்கும்.

நாளடைவில் இந்தப்பிரச்னைகள் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். இதை ஆரம்ப காலத்திலே கவனித்து சரிசெய்ய வேண்டும்.

சிறிய பயிற்சி இதற்கு உதவும்

தோப்புக்கரணம், இடது கையால் வலது காதை பிடிக்க வேண்டும். வலது கையால் இடது காதை பிடித்துக்கொண்டு உடலை நேராக வைத்து குக்கி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்.

இதுபோல் 10 முதல் 25 முறை செய்தால் நல்லது. ஆனால் ஒரேடியாக இதை செய்யக்கூடாது. முதலில் 2ல் துவங்கி கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும்.

இது உடலின் 72 நாடியையும் வேலை செய்ய வைக்கும். அதுபோல் வேலைசெய்தால் நரம்பு மண்டல பிரச்னை சரியாகிவிடும்.ரத்த ஓட்டம் சீராகும். இதை வெறும் வயிற்றில் செய்வது நல்லது.

செம்பருத்தி பூ பொடி மற்றும் வெள்ளை தாமரை பூ பொடி

இரண்டையும் சமஅளவில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, இதை ஒரு ஸ்பூன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். பின்னர் வடிகட்டி பருகலாம்.

சர்க்கரை நோயாளிகள் அப்படியே பருகலாம். மற்றவர்கள் நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகவேண்டும்.

இதையும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இதை வழக்கமாக எடுத்துக்கொள்வது நல்லது.

இவையிரண்டும் நரம்பு மண்டலத்தை சீராக்கி, நரம்பில் உள்ள அடைப்பை சரிசெய்ய வல்லது. ரத்த ஓட்ட பாதிப்பு சரிசெய்யப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகும்.

தடைபட்ட ரத்த ஓட்டம் சீராகும்.

ஒரு வாரம் தொடர்ந்து குடித்துவிட்டு, வாரம் இருமுறை, பின்னர் உங்கள் பிரச்னை சரியாகும் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.