Neer Dosa : உடுப்பி ஸ்பெஷல் நீர் தோசை – வித்யாசமான காலை உணவு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Neer Dosa : உடுப்பி ஸ்பெஷல் நீர் தோசை – வித்யாசமான காலை உணவு!

Neer Dosa : உடுப்பி ஸ்பெஷல் நீர் தோசை – வித்யாசமான காலை உணவு!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2024 11:08 AM IST

Neer Dosa : உடுப்பி ஸ்பெஷல் நீர் தோசை – வித்யாசமான காலை உணவு!

Neer Dosa : உடுப்பி ஸ்பெஷல் நீர் தோசை – வித்யாசமான காலை உணவு!
Neer Dosa : உடுப்பி ஸ்பெஷல் நீர் தோசை – வித்யாசமான காலை உணவு!

(தேங்காயிலுள்ள பிரவுன் நிறத்தை சீவி எடுத்துவிட்டு துருவி போடவும்)

செய்முறை

ஒரு கப் பச்சரிசியை (250 கிராம்) 6 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஊறிய பின்னர் அதை வடித்து எடுத்து ஒரு மிக்ஸியில் போட்டு 2 துண்டு தேங்காயை துருவிப் போட்டு நல்ல மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு பெரிய பவுலில் மாற்றி தேவையான உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி பால் போல தளர்வாக கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் சேர்த்துவிட்டு, ஒரு டம்ளரில் மாவை எடுத்து ரவா தோசை போல (அ) கரண்டியால் கல்லில் மாவை ஊற்றி கல்லை ஆப்பத்திற்கு சுற்றுவது போல சுற்றி தோசை வார்த்து வேகவிடவேண்டும்.

(ஒரு மூடியால் மூடியும் வேகவிடலாம்) வெந்ததும் தோசையின் விளிம்புகள் தானாக மேலெழுந்து வரும்.

அதை நம் கையால் அப்படியே எடுக்கலாம் அல்லது கரண்டியால் தோசையைத் திருப்பாமல் அப்படியே மடிக்கலாம்.

இளநீருக்குள் உள்ள தேங்காய் போல மென்மையான உடுப்பி ஸ்டைல் நீர் தோசை ரெடி.

புதினா அல்லது மல்லி அல்லது இஞ்சி அல்லது தக்காளி அல்லது வெங்காயம் போன்ற புளிப்பு சட்னிகள் இதற்கு பெஸ்ட் சாய்ஸ். வெஜிடபிள் குருமா, ஆலு சப்ஜி போன்ற குருமா வகைகள் இதற்கு நல்ல காம்போதான்.

குறிப்பு –

2 மணிநேரம் அரிசியை ஊற வைத்தும் செய்யலாம். ஆனால் அது பாரம்பரிய முறை அல்ல. தவாவில் எண்ணெய் தடவினால் போதும், ஊற்ற வேண்டியதில்லை.

ஒவ்வொரு தோசை வார்க்கும் போதும் மாவை கரைத்து விட்டு பின்பே தோசை வார்ப்பது சிறந்த முறையாகும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவும்போது ஒரு வெங்காயம் அல்லது கத்திரிக்காயால் தடவவேண்டும்.

மாவில் தேங்காய் அளவு கூடினால் தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும்.

இந்த தோசையை கல்லில் இருந்து எடுத்ததும் சூடாக சாப்பிட வேண்டும், ஆறினால் ருசி நன்றாக இருக்காது.

பச்சரிசி தான் இந்த தோசைக்கு பெஸ்ட்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.