Mushroom Curry : மணமணக்கும் காளான் கறி! உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்வது எப்படி?
Mushroom Curry : பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
காளான் – அரை கிலோ
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
ஷாஹி ஜீரா – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி - பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தக்காளி விழுது – 6 பழம்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சீரகத் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடியளவு
செய்முறை -
காளானை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவேண்டும்.
அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை குழைய வதக்கவேண்டும்.
அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், மல்லித் தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
பின்னர் நறுக்கிய காளானை சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
அடுத்து கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிட்டு 3 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேகவிடவேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவேண்டும்.
சுவையான காளான் கறி தயார்.
இது வெரைட்டி ரைஸ், சாம்பார், ரசம், தயிர், சப்பாத்தி, பூரி, நாண் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிடத்தூண்டும். கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
காளானின் நன்மைகள்
வயிற்று பிரச்னை தீரும் காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. எலும்புகளை பலமாக்கும் காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்