Morning Quotes : இளநீர் ஒரு சிறந்த நீர்ச்சத்து நிறைந்த பானம்தான்; ஆனால், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : இளநீர் ஒரு சிறந்த நீர்ச்சத்து நிறைந்த பானம்தான்; ஆனால், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது பாருங்க!

Morning Quotes : இளநீர் ஒரு சிறந்த நீர்ச்சத்து நிறைந்த பானம்தான்; ஆனால், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது பாருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 30, 2024 08:38 AM IST

Morning Quotes : இளநீர் ஒரு சிறந்த நீர்ச்சத்து தரும் பானம்தான்; ஆனால் அது அனைவருக்கும் பொருந்துமா? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது பாருங்கள்.

Morning Quotes : இளநீர் ஒரு சிறந்த நீர்ச்சத்து நிறைந்த பானம்தான்; ஆனால், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது பாருங்க!
Morning Quotes : இளநீர் ஒரு சிறந்த நீர்ச்சத்து நிறைந்த பானம்தான்; ஆனால், யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது பாருங்க!

இளநீர்

இளநீரில் எண்ணற்ற ஆரோக்கிய குணம் மற்றும் இயற்கையின் ஊற்றாக உள்ளது என்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் அதிலும் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். இதில் உள்ள சிறிய அளவு வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் சி மற்றும் சில பி வைட்டமின்கள் உங்கள் உடலுக்கு நல்லது. இதனால் மக்கள் பரவலாக இளநீர் பருகி வருகிறார்கள். இதன் இயற்கை உட்பொருட்களும், நீர்ச்சத்து குணமும் இந்த பிரபலத்துக்கு காரணம். ஆனால், இளநீர் அனைவருக்கும் பொதுவானது அல்ல. அது ஏன் என்ற காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

பொட்டாசியச் சத்துக்கள் அதிகம்

இளநீரில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. அது பெரும்பாலானவர்களுக்கு நல்லது. ஆனால் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும், சில மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் ஏற்றதல்ல. அதிக பொட்டாசியம் கடும் ஆரோக்கிய குறைபாடுகளையும், சீரற்ற இதயத்துடிப்பையும் ஏற்படுத்தும்.

கலோரிகள்

இனிப்பு பானத்தில் கலோரிகள் குறைவாக உள்ள இளநீர், ஆனால் இதில் கலோரிகள் உள்ளது. எனவே உடல் எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளக்கூடாது. இதை எடுத்தால் உங்கள் உடலில் கலோரிகள் அதிகரித்துவிடும். அதிகம் எடுத்தால் ஆபத்துதான்.

இயற்கை சர்க்கரை

இளநீரில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இதை ரத்தச் சர்க்கரை உள்ளவர்கள் மற்றும் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. இவை ஆரோக்கிய சர்க்கரைதான் என்றாலும், உங்கள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் தன்மைகொண்டவை.

அலர்ஜி

இளநீர் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. சருமக் கோளாறுகள், வயிறு பிரச்னைகள், வாயுத்தொல்லை, சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. உங்களுக்கு தேங்காய் அலர்ஜி என்றால், இளநீரை தவிர்த்தல் நல்லது.

எலக்ட்ரோலைட்கள்

இளநீரில் எலக்ட்ரோலைட்கள் கிடையாது என்பதால், கடும் உடற்பயிற்சிகள் அல்லது உடல் உழைப்பாளிகளுக்கு சிறந்தது அல்லது. விளையாட்டு வீரர்களுக்காக தயாரிக்கப்படும் பானங்களில் விளையாட்டு வீரர்களுக்காக தயாரிக்கப்படும். அதில் அதிகளவில் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் அதிகம் இருக்கும். அது உங்களின் கடும் பயிற்சிகளுக்கு ஈடுகொடுக்கும்.

செரிமான கோளாறுகள்

இளநீரை நீங்கள் பருகும்போது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்களும், இயற்கை சர்க்கரையும் அதற்கு காரணம். உங்களின் வயிறு, செரிமான மண்டலம், குடல் என அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்பட்டது என்றால் கவனம் தேவை.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.