Morning Quotes : காலையில் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்வது என்ற குழப்பமா? இதோ ஆரோக்கியமான ரெசிபிகள்!-morning quotes confused about what to do for breakfast in the morning here are some healthy recipes - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : காலையில் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்வது என்ற குழப்பமா? இதோ ஆரோக்கியமான ரெசிபிகள்!

Morning Quotes : காலையில் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்வது என்ற குழப்பமா? இதோ ஆரோக்கியமான ரெசிபிகள்!

Priyadarshini R HT Tamil
Aug 09, 2024 06:38 AM IST

Morning Quotes : காலையில் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்வது என்ற குழப்பமா? கவலை வேண்டாம். இட்லி, தோசை, உப்புமா, பூரி, பொங்கலை தூக்கி தூரம் வையுங்கள். இதோ எளிமையான மறறும் ஆரோக்கியமான ரெசிபிகள் வரிசை கட்டுகின்றன.

Morning Quotes : காலையில் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்வது என்ற குழப்பமா? இதோ ஆரோக்கியமான ரெசிபிகள்!
Morning Quotes : காலையில் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் செய்வது என்ற குழப்பமா? இதோ ஆரோக்கியமான ரெசிபிகள்!

உண்மையில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அதை நாம் சாப்பிடாமல் விடவேக்கூடாது. கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். இரவு முழுவதும் உண்ணாமல் நாம் இருப்பதால், காலை உணவுதான் அந்த நாளுக்கான மொத்த ஆற்றலையும் வழங்கக்கூடியவை. எனவே அவை சிறப்பானதாக இருக்கவேண்டும்.

பன்னீர் ஸ்டிர் ஃப்ரை

பன்னீர் ஸ்டிர் ஃப்ரையில், பல்வேறு காய்கறிகளும் பன்னீருடன் கலந்து இருக்கும். அதில் சீசும் கலப்பதால், அது உங்களுக்கு காலையில் சிறந்த வயிறு நிறைந்த உணவாக மட்டும் இருக்காது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இதை நீங்கள் காரமாகவோ அல்லது மிதமான காரமாகவோ செய்து சாப்பிடலாம்.

பிரட் உப்புமா

இதற்கு கொஞ்சம் பொருட்களே போதும். வெங்காயம், தக்காளி, சிறிது குடை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். வழக்கமான மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பிரட்களை துண்டுகளாக்கி சேர்ததால் பிரட் உப்புமா தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தனியாக எதுவும் தேவையில்லை, எளிமையான, சுவையான, சத்துக்கள் நிறைந்த காலை உணவு தயார்.

ரவை ஊத்தப்பம்

ரவை ஊத்தப்பம் மிகவும் எளிமையான ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபி ஆகும். பழைய மாவில் ரவையை கலந்தோ அல்லது ரவை, மைதா, அரிசி மாவை கலந்தோ ஊறவைத்து மாவை தயார் செய்துகொள்ளலாம். ஊத்தப்பமாக ஊற்றி மேலே வெங்காயம், கேரட் தூவி, சட்னி, சாம்பாருடன் பரிமாற ஆரோக்கியமான காலை உணவு தயார்.

இந்தியன் ஹோம்மேட் பாஸ்தா

கேரட், ப்ராக்கோலி, குடை மிளகாய் வைத்து, இந்திய மசாலக்களை தூவி செய்யும் பாஸ்தாவும் ஒரு சுவையானதும், ஆரோக்கியமானதுமான காலை உணவு. இதை நீங்கள் கார்லிக் பிரட் மற்றும் சூப்புடன் பருகலாம்.

காய்கறி சான்விச்

பிரட்களில் செய்யும் காய்கறி சான்விச்சும் சுவையான ப்ரேக் பாஸ்ட் ரெசிபிதான். இதற்கு பன்னீர் ஸ்பிரட்டை நீங்களே தயாரித்துக்கொள்ளலாம். பன்னீர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து மிக்ஸி ஜாரில் ஐஸ்கட்டியுடன் அடித்துக்கொள்ளவேண்டும்.

இதை பிரட்டின் உள்புறத்தில் தடவி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் அல்லது பீட்ரூட், வெள்ளரி, வேக வைத்த உருளை என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற காய்கறிகளை வைத்து, சீஸ் தூவி சாப்பிட சுவை அள்ளும்.

எலுமிச்சை சாதம்

சாதத்தை வடித்து, எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து கிளறி, ஒரு தாளிப்பை சேர்த்தால் போதும் நிமிடத்தில் தயாராகிவிடும் எலுமிச்சை சாதம். கர்நாடக மாநிலத்தின் பிரபல காலை உணவு. இதை அரிசி மற்றும் அவல் இரண்டிலும் செய்யலாம். இதில் குறைவான மசாலக்களே சேர்க்கப்படும். அரிசி மற்றும் எலுமிச்சையின் சுவைதான் அதிகம் இருக்கும்.

சீஸ் டோஸ்ட்

சீஸ் பிடிக்கும் என்றால், இந்த டோஸ்டும் உங்களுக்கு மிகவும் பிடித்த ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபியாகும். இதை நீங்கள் அடிப்படை உணவுப் பொருட்களை வைத்தே எளிதாகவும், விரைவாகவும் செய்துவிடமுடியும். சாஸ் மற்றும் சீஸை பிரட்டுக்கு மத்தியில் வைத்து, டோஸ்ட் செய்து எடுத்தால் போதும்.

உருளை ஸ்டிர் ஃப்ரை

உருளைக்கிழங்கை வைத்து, குறைவான அளவு மசாலாக்கள் பயன்படுத்தி வறுத்து எடுத்தால் போதும். இந்த எளிய மற்றும் விரைவாக செய்யக்கூடிய ரெசிபியை நீங்கள் பிரட், ரொட்டி, சப்பாத்தி, பராத்தா, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். சூப்பர் சுவையில் அள்ளும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.