Bamboo Rice Payasam: ’முதுமையை ஓட விடும் மூங்கில் அரிசி பாயாசம்!’ செய்வது எப்படி?
“Moongil Arisi Payasam: 100 கிராம் கொண்ட மூங்கில் அரிசியில் 3.2 கிராம் புரதம், 79 கிராம் கார்போஹைட்ரேட், 2.5 கிராம் நார்ச்சத்து, 0.8 கிராம் கொழுப்புக்கள் உள்ளது”
மூங்கில் அரிசி என்பது மூங்கில் மரத்தித்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை உணவு ஆகும். இது சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். 100 கிராம் கொண்ட மூங்கில் அரிசியில் 3.2 கிராம் புரதம், 79 கிராம் கார்போஹைட்ரேட், 2.5 கிராம் நார்ச்சத்து, 0.8 கிராம் கொழுப்புக்கள் உள்ளது.
மூங்கில் அரிசியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய வைட்டமின் சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய மினரல்களும் உள்ளன.
மூங்கில் அரிசி பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
- மூங்கில் அரிசி - 250 கிராம்
- தேங்காய் பால் - ஒரு டம்ளர்
- நாட்டுச்சர்க்கரை பாகு
- தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
- ஏலக்காய்
- நெய்
- முந்திரி
- திராட்சை
செய்முறை:-
மூங்கில் அரிசியை முதல் 4 மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊர வைத்துக் கொள்ளவும். நன்கு ஊரிய பின்னர் மிக்சியில் ரவை பக்குவத்தில் மூங்கில் அரிசியை அரைத்துக் கொள்ளவும்.
ஏலக்காய் பொடி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரை வேக விடவும். அதன் பின்னர் வேகவைத்த மூங்கில் அரிசி உடன் தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். கடைசியாக தேங்காய் துருவல், நாட்டுச்சர்க்கரை பாகு சேர்த்து கிளறிவிட்டு நெய்யில் வருத்த முந்திரி திராட்சையை சேர்த்து சூடாக பறிமாறவும்.
மூங்கில் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-
- மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன.
- மூங்கில் அரிசியில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்ப உதவுகிறது. இதனால் அதிக உணவு உட்கொள்ளாமல் தடுக்க உதவுகிறது.
- இரத்த சர்க்கரை அளவையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
- மூங்கில் அரிசியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
- மூங்கில் அரிசியில் உள்ள வைட்டமின் பி6 மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
டாபிக்ஸ்