தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mochai Puli Kulambu : அள்ளும் சுவையில் மொச்சைப்பருப்பு புளிக்குழம்பு செய்முறை இதோ! உச்சுக்கொட்டி ருசித்து சாப்பிடுவீங்க

Mochai Puli Kulambu : அள்ளும் சுவையில் மொச்சைப்பருப்பு புளிக்குழம்பு செய்முறை இதோ! உச்சுக்கொட்டி ருசித்து சாப்பிடுவீங்க

Priyadarshini R HT Tamil
Jul 22, 2023 12:19 PM IST

Mochai Puli Kulambu : இதை நீங்கள் அப்படியேவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்னும் திக்காக வேண்டும் என்றால் இதில் தேங்காய் அரைத்து சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டும் இறக்கலாம். மிதமான தீயில் கொதிக்க வைத்து, சுடு சாதத்துடன் பரிமாறலாம்.

மொச்சைப்பருப்பு புளிக்குழம்பு செய்முறை இதோ!
மொச்சைப்பருப்பு புளிக்குழம்பு செய்முறை இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின்போது செய்யப்படும் கூட்டில் மொச்சப்பருப்பு நிச்சயம் இடம்பெறும். மொச்சை பருப்பில் அதிகளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம். மொச்சை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். மொச்சையில் நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்

ஊறவைத்து தோல் நீக்கிய மொச்சை பருப்பு – 1 கப் (பச்சை மொச்சை பருப்பை வைத்தும் செய்ய முடியும் என்பதால், பச்சை மொச்சையாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொள்ளலாம்)

சின்ன வெங்காயம் – 15 (தோல் உறித்து பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 பெரியது (நறுக்கியது)

பூண்டு – 8 பல்

புளி கரைத்தது – அரை கப்

குழம்பு மிளகாய் பொடி (அ) – சாம்பார் பொடி – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

துருவிய தேங்காய் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – அரை ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் (செக்கு நல்லெண்ணெயாக இருந்தால் நல்லது) – 2 ஸ்பூன்

செய்முறை

கடாயை சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, சூடானது கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வெடிக்கவிட வேண்டும்.

வெங்காயம், பூண்டு, மொச்சை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

உப்பு மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் பொடி, குழம்பு மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இப்போது புளி கரைசலை சேர்க்க வேண்டும்.

அனைத்தும் ஒன்றாக நன்றாக வேகும் வரை கொதிக்க விடவேண்டும்.

இதை நீங்கள் அப்படியேவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்னும் திக்காக வேண்டும் என்றால் இதில் தேங்காய் அரைத்து சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டும் இறக்கலாம். மிதமான தீயில் கொதிக்க வைத்து, சுடு சாதத்துடன் பரிமாறலாம்.

இந்த முறையிலேயே, மணத்தக்காளி வத்தல், சுண்டக்காய் வத்தல் என எந்த வத்தல் சேர்த்து வேண்டுமானாலும் சமைத்துக்கொள்ளலாம். கத்தரிக்காய், முருங்கக்காய் என எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.

தேங்காய் அரைத்து சேர்ககாமலும் புளிக்குழம்பு செய்யலாம்.

இதை நீங்கள் சப்பாத்தி, தயிர் சாதம், இட்டி, தோசை, உப்புமா என எதன் கூட வேண்டுமானாலும் சேர்த்து பறிமாறலாம்.

சாதத்துடன் தொட்டுக்கொள்ள அப்பயம், வத்தல் ஆகியவை போதுமானது. மொச்சையே சிறந்த சைட்டிஷ் ஆகவும் இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்