Mealmaker Pulao: மீல் மேக்கர் புலாவ்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க.. குழந்தைகளுக்கு நல்லது
மீல்மேக்கர், சோயா சங்க்ஸ்... இரண்டும் ஒன்றுதான். அவை சோயா பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவை புரதச்சத்து நிறைந்தவை. சோயா சங்க்ஸ் செய்யப்படும் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும்.
மீல்மேக்கர் புலாவ் செய்து பார்த்து இருக்கிறீர்களா? மீல்மேக்கர் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இதனுடன் செய்யப்படும் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும்.
மீல்மேக்கர், சோயா சங்க்ஸ்... இரண்டும் ஒன்றுதான். அவை சோயா பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவை புரதச்சத்து நிறைந்தவை. சோயா சங்க்ஸ் செய்யப்படும் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் காய்கறிகள் இல்லாத போது இவற்றை வைத்து புலாவ் செய்து பாருங்கள். சுவை அபரிமிதமானது. ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக உள்ளன. இதை குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பயன்படுத்தலாம். மிக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய புரதத்தின் மூலமாக சோயாசங்ஸ் பார்க்கப்படுகிறது.
மீல் மேக்கர் புலாவ் ரெசிபிக்கு தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 100 கிராம்
பாசுமதி அரிசி - கால் கிலோ
இலவங்கப்பட்டை - ஒரு சிறிய துண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
ஏலக்காய் - மூன்று
உப்பு - சுவைக்க
நெய் - நான்கு கரண்டி
கிராம்பு - ஐந்து
பிரியாணி இலை - இரண்டு
புதினா சாறு - மூன்று ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - மூன்று ஸ்பூன்
மிளகாய் - நான்கு
வெங்காயம் - ஒன்று
தயிர்
மீல் மேக்கர் புலாவ் செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை ஊற வைக்க வேண்டும்.
2. பின்னர் மீல் மேக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
3. இப்போது அடுப்பில் ஏற்றி குக்கரை சூடாக்க வேண்டும். அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.
4. அவை சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கலந்து விட வேண்டும்.
5. பிரியாணி இலைகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
6. வெங்காயம் பொன்னிறமாக மாறிய விறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
7. அந்த கலவையில் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து வதக்க வேண்டும்.
8. தண்ணீரில் ஊறவைத்த சோயாவை பிழந்து குக்கரில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.அதில் கால்கப் தயிரை சேர்த்து கலந்து விட வேண்டும்.
9. ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, சுவைக்குத் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து விட வேண்டும்.
10. அரிசியை வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
11. ஆவி போன பிறகு குக்கரின் மூடியை அகற்றி விட வேண்டும். அவ்வளவுதான், மீல் மேக்கர் புலாவ் ரெடி.
இது மிகவும் சுவையாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு எளிதாக செய்து கொடுக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்