Treadmill Safety Measures: விபத்து, காயங்களை தவிர்க்க..! ட்ரெட்மில்லை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்
டெல்லியில் ஜிம் ஒன்றில் 24 வயது இளைஞர் டிரெட்மில் உடற்பயிற்சி சாதனத்தில் பயிற்சி மேற்கொண்டபோது மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர் ஜிம்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விகளும், விவாதங்களும் எழுந்துள்ளன.
ஜிம்மில் உடல்பயிற்சி மேற்கொள்வதை தற்போது பலரும் அன்றாட வழக்கமாக வைத்துள்ளனர். ஜிம்மில் கார்டியோ பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்யும் பிரதான உடற்பயிற்சியாக டிரெட்மில்லில் நடைப்பயிற்சி அல்லது ஒட்ட பயிற்சி மேற்கொள்கிறார்கள். குறிப்பாக வலுவான உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் உடலை சார்ஜ் செய்து கொள்ளும் விதமாகவும் ட்ரெட்மில்லை பயன்படுத்துகிறார்கள்.
அத்துடன் ட்ரெட்மில் பயன்பாடு உடல் எடை குறைப்புக்கும் வழிவகுக்கிறது. எனவே உடல் எடை குறைப்புக்காக ஜிம் செல்வோர் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக ட்ரெட்மில் இருந்து வருகிறது. அந்த வகையில் ட்ரெட்மில் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதா என்பதை ஒரு முறை செக் செய்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் மேற்கூறிய நிகழ்வு போல் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.
ட்ரெட்மில்லை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
ட்ரெட்மில்லை பாதுகாப்பாக பயன்படுத்துவதன் மூலம் மின்கசிவு ஏற்படாமலும், பிற காயங்கள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் நிபுணர்கள் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில
- டிரெட்மில் பயன்படுத்தும் முன் அதன் கையோட்டை கவனமாக படிக்கவும்
முதல் முறையாக ட்ரெட்மில் பயன்படுத்துவோர் பயிற்சியாளர்கள் தரும் தகவல்களை அப்படியே பின்பற்றுவதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். பயிற்சியாளர் சொல்வது முக்கியமான விஷயங்களாக இருந்தாலும், பாதுகாப்பான பயன்பாட்டுக்கு என்ன தேவை என்பதை ட்ரெட்மில்லுக்கான கையேட்டில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் தவிர்ப்பது நமக்கே பின்னர் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
இந்த கையேட்டில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என பல விஷயங்களை குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே அதை நன்கு தெளிவாக படித்து புரிந்து கொண்டு, ட்ரெட்மில் பயன்படுத்துவதற்கு ஏற்ப பழகி கொள்ள வேண்டும்.
- சரியான இடத்தில் சாதனத்தை வைத்தல்
ட்ரெட்மில் சாதனத்தை நன்கு உலர்ந்த, சமமான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக் தண்ணீர் எந்த வகையில் தங்கும் பகுதிகளில் வைக்க கூடாது. ஏனென்றால் இவைதான் மின்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. மழை காலத்தில் நீர் கசிவு அதிகமாக இருக்கும் என்பதால், ட்ரெட்மில்லை இந்த பகுதிகளிலிருந்து தள்ளியே வைக்க வேண்டும். அத்துடன் அவை இருக்கும் பகுதி எப்போது உலர்ந்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
- ட்ரெட்மில்லுக்கு எந்த சிக்கலும் ஏற்படாதவாறு மின்இணைப்பு கொடுக்க வேண்டும்
ட்ரெட்மில்லுக்கு நேரடி இணைப்பை மட்டும் கொடுக்க வேண்டும். எக்ஸ்டன்ஷன் கார்டுகள், ஆடாப்டர்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றில் மின்கசிவுக்கான அபாயம் உள்ளது. அவ்வப்போது ட்ரெட்மில் பவுர் கார்டுகளை சேதமடைந்துள்ளதா என்பதை செக் செய்து கொள்ள வேண்டும்.
- ட்ரெட்மில் பயன்பாட்டுக்கு ஏற்பட உடைகள் மற்றும் காலணிகள் அணிதல்
மிகவும் வசதியாக, உடலுக்கு இறுக்கம் தராத ஆடைகள், காலணிகளை ட்ரெட்மில் பயண்படுத்தும்போது அணிய வேண்டும். அதேபோல் உடலை விட்டு விலகியிருக்கும் ஆடைகளும் ட்ரெட்மில்லில் நகரும் பகுதிகளில் சிக்க கொள்ள வாய்ப்பு உள்ளது. காற்று புகும் அளவில் ஆடை அணிந்தால் போதுமானது.
- பாதுகாப்பு அம்சங்களில் கவனமாக இருக்க வேண்டும்
தற்போது வரை லேட்டஸ்ட் ட்ரெட்மில்களில் அவசரகால் ஸ்டாப் பட்டன், பாதுகாப்பு இணைப்பு போன்றவற்றுடனே வருகிறது. இந்த அம்சங்கள் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கவனமுடன் ட்ரெட்மில்லை பயன்படுத்தவும்.
- தண்ணீர் பயன்பாட்டை தவிர்க்கவும்
நடைப்பயிற்சி அல்லது ஒட்ட பயிற்சி மேற்கொள்வோர் உடலில் நீரேற்றம் குறைந்து விட்டாலோ, தாகம் எடுத்தாலே பருகுவதற்கு வசதியாக ட்ரெட்மில் அருகே தண்ணீர் பாட்டிலை வைத்திருப்பார்கள். ஆனால் தண்ணீர் பாட்டில்கள் அல்லது உடலின் பகுதிகளில் இருந்து வெளியேறு நீர் உங்களது சாதனத்தில் மின்கசிவை ஏற்படுத்தி காயமடைய செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தேவை இருந்தாலும் இந்த சாதனம் அருகில் தண்ணீர் உள்பட திரவம் சார்ந்த பொருள்களை அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜிம்மில் மட்டும் இல்லாமல் உங்களது வீடுகளில் ட்ரெட்மில் வைத்திருந்தாலும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9