Lung Cancer : சென்னையில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு! அச்சுறுத்தும் ஆய்வு! காரணம் என்ன தெரியுமா?
Lung Cancer : சென்னையில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு! அச்சுறுத்தும் ஆய்வு! காரணம் என்ன தெரியுமா?
ஒரு புற்றுநோய் மரணம் நம்மை எவ்வளவு பாதிக்கிறது. இந்த நிலையில் சென்னையின் புற்றுநோய் பாதிப்பு ஆய்வு அறிக்கைகள் அச்சுறுத்துபவையாக உள்ளன.
Tamilnadu Cancer Registry Project Report 2021ன் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஒரு லட்சம் பேரில் 6.3 ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருக்க, சென்னையில் அது ஒரு லட்சம் பேருக்கு 12.7 என அதிகமாக உள்ளது.
அதேபோல், தமிழகத்தின் பிற இடங்களில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சம் பேரில் 27ஆக உள்ளது. சென்னையில் ஒரு லட்சம் பேரில் 52 பேர் என அதிகமாக உள்ளது.
சமீபத்தில் செய்யப்பட்ட சர்வதேச ஆய்வுகளில் காற்று மாசுபாட்டிற்கும், மார்பக புற்றுநோய் வாய்ப்பிற்கும் உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
2017ல் சென்னையில் செய்யப்பட்ட ஆய்வில் புகைபிடித்தல் முற்றிலும் இல்லாத 55 சதவீதம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
2019ல் தமிழகத்தில் மொத்த புற்றுநோயில் 7.5 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதில் வேதனை என்னவெனில் 85 சதவீதம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிய நிலையில் தான் (Stage-3&4) நோய் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 15 சதவீதம் பேரிடத்து மட்டுமே நோய் ஆரம்ப நிலையில் (Stage 1&2) கண்டறியப்பட்டுள்ளது.
உள்ளூர் (தமன்பிரீத்சிங்-செப்டம்பர் 2023), வெளியூர் ஆய்வுகளில் (ஹமத் கோசெமி சரியட் பனகி – 2023) காற்று மாசுபாட்டிற்கும், நுரையீரல் புற்றுநோய்க்குமான தொடர்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதர காரணங்களாக புகைத்தல், அஸ்பெஸ்டாஸ் துகள்கள் (Mesothelioma), ரேடான் வாயு மற்றும் கதிர்வீச்சு, கன உலோகங்கள் (Chromium, cadmium, nickel, zinc மற்றும் ஆர்செனிக்) காற்று மாசுபாட்டில் குறிப்பாக பி.எம். 2.5 மைக்ரான் துகள்கள் போன்றவையும் காரணமாக உள்ளது.
பி.எம்.2.5 மைக்ரான் துகள்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 36 சதவீதம் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
சிஏஜி அறிக்கை ஒன்றில் 69.58 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி மூலம் வெளியாகும் கழிவுத்துகள்கள் (Flyash) முறையான பாதுகாப்பில்லாமல் கொட்டப்பட்டு கிடப்பதாக செய்திகள் உள்ளன.
தமிழக மின்பகிர்மான வாரியத்திற்கு (Tangedco), நிலக்கரி கழிவுத்துகள்களை அகற்ற ரூ.625 கோடி நிதி ஒதுக்கப்பட்டும், ரூ.61.91 கோடி மட்டுமே (10 சதவீதம்) செலவு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக விதிகளின்படி ஒதுக்கப்பட்ட முழு பணத்தையும் முறையாக செலவழிக்க வேண்டும். சிஏஜி அறிக்கையில், காற்றில் மிதக்கும் கழிவுத்துகள்களின் அளவு (SPM-Suspended Particulate Matter) 150 மிகி/கன மீட்டராக இருக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னையில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகம் இருப்பது பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 2017ல் வெளிவந்த அறிக்கை ஒன்றில், கடந்த 5 ஆண்டுகளில் 82.71 டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டு, 25.81 மில்லியன் டன் கழிவுத்துகள்கள் (Flyash) வெளிவந்துள்ளது.
கார்பன் டை ஆக்ஸைட் – 112.07 மில்லியன் டன்
சல்பர் டைஆக்ஸைட் – 1.12 மில்லியன் டன்
நைட்ரஜன் ஆக்ஸைடுகள் – 3.3 மில்லியன் டன்
வெளியாகியும் காற்றை மாசுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் காற்று மாசுபாட்டால் ஏற்படும்பொருளாதார இழப்பு ஆண்டுக்கு 1,960 கோடி என ஒரு ஆயிவில் தெரியவந்துள்ளது. சென்னை சவீதா பல்கலைக்கழக ஆய்வில், சென்னையில் நுரையீரல் புற்றுநோய் தாக்கம் 6.9 சதவீதமாக இருப்பது தெரியவந்துள்ளது. (ஆய்வாளர் கரிஷ்மா ரவீந்தர் 2017 அக்டோபரில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்)
மக்களின் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றை சுவாசிப்பது அரசால் காவு கொடுக்கப்பட்டு, மக்களின் நலம் சென்னையிலும், பிற பகுதிகளிலும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
சென்னையில் நுரையீரல், மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க காற்று மாசுப்பாடும் முக்கிய காரணமாக இருக்க முடியும்.
தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமா?
எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு, உர உற்பத்தி நிறுவனமான கோரமண்டல் சர்வதேச நிறுவன தொழிற்சாலையில் ஏற்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் இன்னமும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கசிவிற்கான காரணத்தை கண்டறியவில்லை.
TNPCB விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பிப்ரவரி 6, 2004 வரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அனுமதி கோரியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் TNPCB சுயேட்சையாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இருந்ததை தீர்ப்பாயம் வன்மையாக கண்டித்துள்ளது.
நன்றி – மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்