தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Live Without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

Priyadarshini R HT Tamil
May 19, 2024 10:52 AM IST

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும்? ஆய்வுகள் கூறுவது என்ன கூறுகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!
Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் ஆய்வுகளும் சிலவற்றை உறுதிப்படுத்துகின்றன. அவையும் மனிதர்களின் நலவாழ்வுக்கு வழிவகுக்கின்றன. அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் வாழ வேண்டுமெனில் நாம் நோய்கள் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொண்டு அதையும் பின்பற்றவேண்டும். அப்படி பின்பற்றும்போது, அது நமது உடல் நலனைக் காக்க உதவுகிறது.

உடலை காப்பது எது? 

மனித உடம்பு செல்களால் ஆனது. செல்களின் அழிவுக்கு Free Radicleஸ் அதிகம் சேர்வது முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆக Free Radicleஸ் அளவை செல்களில் குறைக்க பயன்படும் (Anti-oxidants) வேதிப்பொருட்கள் அதிகளவில் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது செல்களின் ஆயுளை அதிகரிக்கும்.

நெல்லிக்கனியின் சிறப்பு 

தமிழ் வரலாற்றில் அதியமான், ஔவை பிராட்டிக்கு நெல்லிக்கனியை கொடுத்து நீண்ட ஆயுளை உறுதிபடுத்த விரும்பியது தெளிவாக பதிவாகியுள்ளது.

நெல்லிக்கனியில், வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) அதிகமிருப்பதும், அது Anti-oxidant ஆக செயல்பட்டு Free radicleஸ் உருவாதலை குறைப்பதால், செல் அழிவு தடுக்கப்பட்டு, நீண்ட ஆயுள் பெற உதவி செய்வது தற்போதைய ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, Anti-oxidantகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நீண்ட ஆயுள் பெற உதவும்.

சமீபத்தில், Penn State's College of Health and Human Developmentச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெரியவர்கள் மத்தியில், உணவில் அதிக கலோரி தரும் பொருட்களை கட்டுப்படுத்துவதன் மூலம், குரோமோசோம்களின் முனைகளில் உள்ள டெலோமியர் (Telomeres) குரோமோசோம்களின் அழிவிலிருந்து காக்கும் பணியை அவை செய்கின்றன. பாதிப்பு, அதிக கலோரி உணவுகளை எடுத்துக் கொள்பவர்களைக் காட்டிலும் வேறுபட்டு (குறைவாக உள்ளது) தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டு கால ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டு, "Aging Cell" எனும் அறிவியல் ஆய்விதழில் சமீபத்தில் வெளிவந்துள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட இரு சாரார் மத்தியில் டெலோமியரின் நீளம் ஒரே அளவில் இருந்தாலும், உணவில் 20 சதவீதம் முதல் 60 சதவீதம் குறைந்த கலோரி எடுத்துக்கொண்டவர்கள் மத்தியில் டெலோமியரின் அழிவு குறைவாக இருப்பதால், நீண்ட ஆயுள் பல உயிரினங்களில் (Species) அதிகரித்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தவத்தை பின்பற்றிய பல மனிதர்கள் அல்லது முனிவர்கள் அதிக ஆயுள் பெற்று உயிர் வாழ்ந்திருப்பதற்கு, அவர்கள் மேற்கொண்ட விரதம் (கலோரி கட்டுப்பாடு) காரணமாக இருக்க முடியும்.

பெரியவர்கள் மத்தியில் உணவில் கலோரி கட்டுப்பாடும், Anti-oxidants நிறைந்த உணவுகள் (உ.ம்.நெல்லிக்கனி-வைட்டமின்-சி) அதிகம் சேர்த்துக்கொள்வதும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்