வாழ்வியல் முறை மாற்றங்களே உங்களை மார்பக புற்றுநோய்களில் இருந்து காக்கும்! அது எப்படி என பார்க்கலாமா?
சிறிய வாழ்வியல் மாற்றங்கள்தான், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.
அக்டோபர் மாதம் முழுவதுமே மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன் நோக்கம், விழிப்புணர்வு, புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிதி திரட்டல், காரணம், தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் குணமடைதல் ஆகியவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்வது இந்த நாளின் நோக்கம் ஆகும். இந்திய பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுள் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மருத்துவ வசதிகள் இன்மை மற்றும் அச்சம் காரணமாக கடைசி நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இது பெண்களுக்கு சவாலான ஒன்றுதான். எனினும் வாழ்வியல் மாற்றங்கள் இந்தநோய் ஏற்படாமல் காப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விளக்கி, அவர்களை அந்நோயை எதிர்த்து போராடச் செய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.
வாழ்வியல் முறை மாற்றங்களில் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதம் உட்கொள்வதும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சி ஆகியவற்றை குறைப்பதும் முக்கியம். வழக்கமான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு உடலை ஃபிட்டாக வைத்திருக்கவேண்டும். மது அருந்துவதை குறைக்கவேண்டும். போதை பொருட்கள் உபயோகமும் புற்றுநோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும். எனவே அவற்றையும் தடுக்கவேண்டும். உடல் எடையை முறையாகப் பராமரித்து 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் அவ்வப்போது பரிசோதனைகள் செய்துகொண்டு, புற்றுநோய் ஏற்படாமல் தடுத்துக்கொள்ளவேண்டும்.
புற்றுநோயின் அறிகுறிகள்
மார்பக அளவில் மாற்றம்
வலியில்லாத கட்டி மார்பிலும், அக்குளிலும் தோன்றும்
மார்பில் ரத்தம் வெளியேறும்
மார்பக காம்புகளில் மாற்றம்
சருமம் கடினமாகி வறண்டு போவது
புற்றுநோய் ஆபத்தை குறைக்க மேற்கொள்ளவேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறைகள்
ஆரோக்கிய எடை மேலாண்மை
பெண்களுக்கு மெனோபாஸ்க்கு பின்னர் உடல் பருமனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறிது. ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், அதை செய்யும் கொழுப்பு திசுக்களும் குறிப்பிட்ட சில மார்பக புற்றுநோய்களை ஏற்படுத்தும்.
வழக்கமான உடற்பயிற்சி
வழக்கமான உடற்பயிற்சி உடலில் ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்தும். அது உடல் எடையை பராமரிக்கம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். தினமும் 30 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்வது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.
ஆரோக்கியமான உணவு
பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும். இதனால் ஒருவர் எப்போது சரிவிகித உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும்.
மதுவை கட்டுப்படுத்த வேண்டும்
மது அருத்துவது மார்பக புற்றுநோயை அதிகரிக்கும். எனவே மது உட்கொள்வதை தவிர்த்தல் நலம். முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால் குறைத்துக்கொள்ளலாம்.
புகையிலையை தவிர்க்க வேண்டும்
பல்வேறு புற்றுநோய்களுக்கு புகை பிடித்தல்தான் காரணமாகும். அதுவே மார்பக புற்றுநோய்க்கும் காரணமாகும். நீங்கள் புகைபிடிப்பது அல்லது அதிக புகைக்கு ஆளாவது இரண்டுமே புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. எனவே அதையும் தவிர்க்க வேண்டும்.
பாலூட்டுதல்
ஓராண்டு அல்லது அதற்கும் மேல் பாலூட்டுவது மிகவும் அவசியம். இதைச் செய்யும் தாய்மார்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையும்.
ஹார்மோன்கள்
ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியை நீண்ட காலம் மெனோபாஸ்க்கு பின்னர், எடுப்பதும், மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். எனவே இந்த சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையை பின்பற்றவேண்டும்.
பரிசோதனை மற்றும் சுய பரிசோதனை
வாழ்க்கை முறை தேர்வுகள், புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும். மேமோகிராம்கள் மூலம் முன்னரே கண்டுபிடிப்பது, மார்பக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுதான் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க காரணமாகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்