Lice Control Tips : தலையில் தாங்கமுடியாத பேன் தொல்லையா? இதோ 2 எளிய வழிகளில் தீர்வுகள்!
Lice Control Tips : தலையில் தாங்கமுடியாத பேன் தொல்லையா? இதோ இரண்டு வழிகளில் தீர்வுகள்!
ஒரு சிலருக்கு தலையில் தாங்க முடியாத அளவுக்கு பேன், பெடுகு போன்றவற்றின் தொல்லை அதிகரிக்கும். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடும் பிரச்னைகளை ஏற்படுத்திவரும். அதிலிருந்து விடுபட இங்கு இரண்டு வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காய்ப்பாலில் மிளகுத்தூளை சேர்த்து கலந்து சிறிது நேரம் வைத்துவிடவேண்டும். அப்போதுதான் அதில் உள்ள காரம் முழுமையாக பாலில் இறங்கியிருக்கும்.
சிறிது நேரத்துக்குப்பின் அதை எடுத்து தலையில் தடவவேண்டும். நல்ல வேர்க்கால்களில் இருந்து முடி முழுவதும் தடவவேண்டும். அதை ஒரு மணி நேரம் ஊற விடவேண்டும். சிலருக்கு மிளகின் காரம் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், கட்டாயம் ஊறவிட்டுத்தான் ஆகவேண்டும்.
நன்றாக ஊறிய பின் ஒரு மிருதுவான ஷாம்பூ தேய்த்து தலையை நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.
நன்றாக காய்ந்த பின் தலையில் உள்ள பேன்களை சீவி எடுத்துவிடவேண்டும். பேன்கள் தலை அலசும்போதே வெளியேறியிருக்கும். மிச்சமுள்ள பேன்கள் மற்றும் ஈருகளும் சீவி எடுக்கும்போது வந்துவிடும். சிலருக்கு ஈர்கள் தலையில் ஒட்டிக்கொண்டு வராது. அவையும் இதுபோல் செய்யும்போது வந்துவிடும்.
தேங்காய்ப்பால் முடி வளர்ச்சிக்கு உதவும். முடியை பளபளப்பாக்கும். முடி உதிர்வதை தடுக்கும்.
தேவையான பொருட்கள்
வேப்பிலை – ஒரு கைப்பிடி
மிளகு – ஒரு ஸ்பூன்
செய்முறை
இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடித்துக்கொள்ள வேண்டும். இதையும் சிறிது நேரம் ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் தலையில் முடியின் வேர்க்கால்கள் முதல் முடி வரை தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதுவும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் ஊறியபின் வழக்கம்போல் மிதமான ஷாம்பூ தேய்த்து குளிக்க வேண்டும்.
இதை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால் உங்களின் பேன் தொல்லை நீங்கும்.
பெரும்பாலும் தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் தலையில் அழுக்கு சேர்ந்து பேன் தொல்லை ஏற்படாது.
வீட்டில் ஒருவருக்கு தலையில் பேன் இருந்தால் அது அனைவருக்கும் பரவிவிடும். எனவே வீட்டில் உள்ள அனைவருமே இதை செய்ய வேண்டும். பேன் இருப்பவர்களின தலையனை, சீப்பு ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பு
இந்த இரண்டு நீங்கள் தலையில் வைப்பதற்கு உங்களிடம் செல்ஃபி பாட்டில் இருந்தால், அதை பயன்படுத்தலாம். அது நல்ல பலனைத்தரும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்