தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்துகொள்வோமா?
உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது பொதுவானது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அறிந்துகொள்வோமா என்பது குறித்துப் பார்ப்போம்.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் வாழைப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தமிழர்கள் கூறும் முக்கனிகளில் மூன்றாம் கனி, வாழைப்பழம். பெரும்பாலான மக்கள் வாழைப்பழத்தை குறைவாகச் சாப்பிடுகிறார்கள். முழுச் சாப்பாடு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது என்பது பலரின் வழக்கமாக இருக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றின் உள்ளடக்கம் காரணமாக, இந்த பழங்கள் மக்களை எளிதாக தூங்க வைக்கும் நற்பெயரைக் கொண்டுள்ளன.
மெக்னீசியம் நம்மை அமைதியாகவும், ஓய்வெடுக்கவும் வைக்க உதவுகிறது. இருப்பினும், வாழைப்பழத்தில் 30 மில்லிகிராம் மக்னீசியம் உள்ளது. அதே நேரத்தில் உடலின் தினசரி தேவை 400 மில்லிகிராம் ஆகும். எனவே, நாம் உண்ணும் உணவு உடலின் தினசரி மெக்னீசியம் உள்ளடக்கத்தை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும்.