Benefit Of Green Banana: பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?
பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. அது பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. நீரிழவு நோய் தொடங்கி பலவிதமான பிரச்னைகளை சரிசெய்யும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல் தெரிவிக்கிறார்.
வயிற்றுப் பாதையில் ஏற்படும் மலச்சிக்கல், குடல் புண், குடல் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்ய பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். குடல் புண் எனப்படும் அல்சரை சரிசெய்ய தினமும் மதிய உணவுக்கு பிறகு கட்டாயம் ஒரு பச்சை வாழைப்பழத்தை எடுத்து கொள்ளவும். நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு மாமருந்தாகும். இதில் ஸ்டார்ச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.
பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள்
பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. பச்சை வாழைப்பழத்தில் வைட்டமின் B6 உள்ளதால் இது உடலில் சீரான ஆக்ஸிஜனேற்றத்துக்கு உதவுகிறது. மேலும், வைட்டமின் B6 உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரிசெய்யவும் பச்சை வாழைப்பழம் உதவுகிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தை தந்து பற்களை வலுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் பச்சை வாழைப்பழத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது கொடுக்கலாம்.
பச்சை வாழைப்பழம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், தினமும் பச்சை வாழைப்பழத்தை எடுத்து கொள்ள வேண்டும். டயட்டில் இருப்பவர்கள், ஜிம் செல்பவர்களும் பச்சை பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.
டாபிக்ஸ்