KusKus Halwa : கசாகசாவில் அல்வாவா? எப்படியிருக்கும்? இதோ ரெசிபி!
KusKus Halwa : கசாகசாவில் அல்வாவா? எப்படியிருக்கும்? இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள்
கசகசா - 50 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
பசும்பால் - 100 மிலி
கிராம்பு பொடித்தது - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பவுடர் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
இடித்த சுக்கு & மிளகு - 1 சிட்டிகை
உடைத்த முந்திரி -2 ஸ்பூன்
உலர் திராட்சை - 1 ஸ்பூன்
துருவிய பிஸ்தா பருப்பு - 1 ஸ்பூன்
செய்முறை
கசகசாவை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
பின்னர் மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் பாலுடன், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவேண்டும். பால் வற்றிய பின்னர் பனங்கற்கண்டு போட்டு அதில் ஒரு டீஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், சுக்கு, மிளகு, கிராம்பு மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்த்து அல்வா பதம் வரும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அல்வா கேசரி போன்ற பதம் வரும்போது இறக்கி வைத்து முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை தூவி இளம்சூட்டில் சாப்பிடவேண்டும்.
கசகசாவின் மருத்துவ குணங்கள்
சளி, இருமல், தொண்டை வலி, வயிற்றுப் புண் இதற்கு சிறந்த மருந்து. உடல் சூட்டை குறைக்கவல்ல அல்வா. சூடான இந்த அல்வாவுடன் பிஸ்தா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிட சுவை வேற லெவலில் இருக்கும்.
கசகசா உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
இதில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரக கற்கள் பிரச்னையை குணப்படுத்த வல்லது.
வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப்போக்கால் உடல் இழக்கும் பொட்டாசிய சத்தை ஈடுசெய்யும்.
குருமாக்கள் செய்யும்போது சிறிது நீரில் ஊறவைத்து அரைத்து மசாலாவில் சேர்த்தால் குருமாவுக்கு திக்னஸ் கொடுக்கும். அதனுடன் குருமா போன்றவற்றால் ஏற்படும் வயிறு மந்தத்துக்கு மருந்தாகும்.
அரபு நாடுகளில் இருப்பவர்கள் இந்த அல்வாவைச் செய்தால் உங்களுக்கு ருசிக்க வாய் இருக்காது.
இந்த அல்வாவை பனங்கற்கண்டில் செய்தால் ருசி மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு பதில் வெல்லம் அல்லது சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது பனை வெல்லம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுபகம், ஷ்யாம் ப்ரேம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்