Kiwi Fruits: க்ரீம் போன்ற தோற்றம்! உடல் ஆரோக்கியத்துக்கு வரபிரசதமாக இருக்கும் கிவி பழங்கள்
இதய ஆரோக்கியம், டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கான சிறந்த பழமாக கிவி பழம் இருந்து வருகிறது. கிவி பழம் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
பழங்களில் சிறிய அளவில் கிரீம் போன்று சாப்பிடுவதர்கு இருக்கும் கிவி பழங்கள் உடலுக்கு நன்மைகளை தரும் சூப்பர் உணவாக இருந்து வருகிறது
இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை..! உடல் ஆரோக்கியத்தில் அற்புதம் நிகழ்த்தும் கிவி பழம்
பச்சை நிறத்தில் இருக்ககூடிய கிவி பழங்கள் இனிப்பு புளிப்பு சுவையுடன், ஊட்டச்சத்துகள் மிக்க பழமாக இருப்பதுடன், டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறந்தாகவும் உள்ளது.
வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக இருக்கும் கிவி பழம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
கிவி பழத்தில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
இனிப்பு சுவையை கொண்ட இந்த பழம், குறைவான கலோரிக்கள், கொழுப்புகளை கொண்டுள்ளது. எனவே எடை குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க விரும்புவோருக்கான சிறந்த பழமாக உள்ளது.
இதய ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்களிப்பாக இருந்து வரும் பொட்டாசியம் கிவி பழத்தில் போதிய அளவிலான நிறைந்துள்ளது. இதில் இருக்கும் எலக்ட்ரோலைட் ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன், இருதய நோய் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது
குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்ட பழமாக இருந்து வரும் கிவி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறந்த பழமாக உள்ளது
கிவி பழத்தில் இடம்பிடித்திருக்கும் செரோடோனின் என்கிற சேர்மானம் தூக்கத்தையும், மனநிலை மாற்றத்தையும் சீராக வைக்க உதவுகிறது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்