தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sexual Health Foods: உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பு! பாலியல் வாழ்க்கையை இன்பமாக வைத்து கொள்ள உதவும் உணவுகள்

Sexual Health Foods: உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பு! பாலியல் வாழ்க்கையை இன்பமாக வைத்து கொள்ள உதவும் உணவுகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 01, 2024 05:35 PM IST

உயரினுக்களின் உற்பத்தியையும், அதன் வீரியத்தையும் அதிரிக்கும் தன்மை நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவு வகைகளுக்கு உண்டு. எனவே குழந்தை பெற்றுகொள்ள விரும்பும் தம்பதிகள் இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்வதால் குழந்தை பேறு பெறுவதோடு, அவர்களின் பாலியல் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும்.

பாலியல் வாழ்க்கையை இன்பமாக வைத்து கொள்ள உதவும் உணவுகள்
பாலியல் வாழ்க்கையை இன்பமாக வைத்து கொள்ள உதவும் உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தை பெற்றக்கொள்ள வேண்டும் என முடிவில் இருப்பவர்கள் அதற்கு தகுந்தவாறு உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் உணவுகளையும் திட்டமிட்டு சாப்பிட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அத்துடன் நாம் சாப்பிடும் உணவுகளில் உயிரணுக்களின் வீரியமானதும் அதிகரிக்கும். எனவே குழந்தை பெற்று கொள்ள தயாராக, விரும்பும் தம்பதிகள் சில உணவு வகைகள் தங்களது டயட்டில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள், சர்க்கரை அளவு அதிகமாக சேர்க்கப்படும் பானங்கள், பலகாரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டால் பழங்கள், காய்கறிகள், மீன்கள், சிக்கன் போன்றவற்றை சாப்பிடும் ஆண்களின் விந்து எண்ணிக்கையானது அதிகரிக்கவே செய்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்தால் உடல் ஆரோக்கியம், விந்து ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றவாறு உணவுகளை திட்டமிட்டு சாப்பிட வேண்டும் என்கிறார் கருத்தரித்தல் ஆலோசகர் டாக்டர் பவன் தேவேந்திர பென்டாலே. ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

முட்டை

முட்டையில் ஏராளமான புரதம், வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை விந்தணுக்களின் இயக்கம், அதன் எண்ணிக்கை ஆகியவற்றை மேம்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உண்டாகாமல் தடுக்கிறது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். இதை அதிக அளவில் எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

அஸ்பாரகஸ்

தண்ணீர் விட்டான் கொடி என்று அழைக்கப்படும் அஸ்பாரகஸில் விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையான வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் விந்தணுக்கள் தீவரமாக சேதம் அடைவதும் தடுக்கப்படுகிறது. இதனால் இயல்பாகவே உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து இனப்பெருக்க ஆரோக்கியமும் மேம்படுகிறது.

பெர்ரிக்கள்

ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஷ்ப்பெர்ரி, க்ரான்பெர்ரி உள்பட பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள அழற்சிக்கு எதிரான பண்புகள் விந்தணுக்காள சேதமாவதை தடுத்து, அவை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக அளவிலான மக்னீசியம், வைட்டமின் பி1, சி போன்றவை நிரம்பியுள்ளதால் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் நிறைந்துள்ள ப்ரோமெலெய்ன் என்ற நொதிகள் விந்தணுக்களின் சிறப்பான இயக்கத்துக்கு உதவுகிறது.

பசலை கீரை

இதில் அதிகப்படியான ஃபேலிக் அமிலங்கள் இருப்பதால் விந்தணுவின் உற்பத்திக்கு உதவுகிறது.

பூண்டு

பூண்டில் உள்ள செலனியம் என்கிற நொதி விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது

மாதுளை

சிவப்பு முத்துக்கள் என்று அழைக்கப்படும் மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ரத்த ஓட்டத்தில் இருக்கும் தீவர தாக்குதல் தன்மையை குறைத்து, விந்தணுக்கள் சேதமாவதை தடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்